ஜிகா வைரஸ் தொற்றை கண்டறியும் சோதனை மையம் தொடக்கம்

Pradeepa 1 View
1 Min Read

சென்னை தேனாம்பேட்டை மக்கள் நல்வாழ்வு துறை இயக்குனர் அலுவலக வளாகத்தில் ஜிகா வைரஸ் தொற்றை கண்டறியும் சோதனை மையம் செயல்பட தொடங்கியுள்ளது.

 

கேரளாவில் ஜிகா வைரஸ் பாதிப்புகள் அதிகரித்து வருவதால் தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் மக்கள் நல்வாழ்வுத்துறை முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை எடுத்துள்ளது. ஜிகா வைரஸ் தொற்றை கண்டறிய வழக்கமான எலிசா பரிசோதனையை தொடர்ந்து ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை மூலமும் ஜிகா வைரஸ் தொற்றை கண்டறிவதற்க்கான நடக்வடிக்கைகளை நல்வாழ்வு துறை எடுத்து வருகிறது.

இந்நிலையில் சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் உள்ள மக்கள் நல்வாழ்வு துறை ஆய்வகத்தில் ஜிகா வைரஸ் கண்டறிவதற்க்கான சோதனை மையம் அமைக்கப்பட்டு செயல்பட தொடங்கியுள்ளது. இதுவரை கேரளா எல்லையை ஒட்டி உள்ள தமிழக பகுதிகளில் 65 இடங்களில் ADS கொசுக்களின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைகள் செய்யப்பட்டு இருக்கின்றனர். பரிசோதனை செய்யப்பட்ட எந்த மாதிரியிலும் ஜிகா வைரஸ் தொற்று கண்டறியப்படவில்லை என தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது.

Share This Article
Exit mobile version