இன்று உலக தண்ணீர் தினம் – மழைநீர் சேகரிப்பு பிரச்சாரத்தை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்

2 Min Read
  • உலக தண்ணீர் தினமான இன்று பிரதமர் நரேந்திர மோடி மழைநீர் சேகரிப்பு பிரச்சாரத்தை காணொலிக் காட்சி முலமாக தொடங்கி வைக்கிறார்.
  • இந்நிகழ்ச்சியின் போது நதிகள் இணைப்பிற்கான தேசிய கண்ணோட்ட திட்டத்தின் முதல் திட்டமான கென் பெத்வா இணைப்பு திட்டத்தை செயல்படுத்துவதற்கான வரலாற்றுச் சிறப்புமிக்க புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் மத்திய ஜல் சக்தி அமைச்சரும் உத்தரப் பிரதேசம், மத்திய பிரதேச மாநிலங்களின் முதல்வர்களும் பிரதமர் முன்னிலையில் கையெழுத்திடுவார்கள்.
  • ‘‘மழை நீர் சேகரிப்பு , மழை எங்கு பொழிந்தாலும், எப்போது பொழிந்தாலும்” என்ற கருப்பொருளோடு நாடு முழுவதும் ஊரக மற்றும் நகர்ப்புறங்களில் இந்தப் பிரச்சாரம் செயல் படும். பருவமழை காலத்திலும், பருவமழைக்கு முந்தைய காலத்திலும் அதாவது இந்த வருடம் மார்ச் 22-ஆம் தேதி முதல் நவம்பர் 30-ஆம் தேதி வரை இந்தப் பிரச்சாரம் மேற்கொள்ளப்படும்.
  • மக்களின் பங்களிப்போடு தண்ணீரின் பாதுகாப்பை முன்னிறுத்தி இந்தப் பிரச்சாரம் நடைபடுத்தப்படும்.
  • இந்த பிரச்சாரத்தின் நோக்கம், மழைநீர் முறையாக சேமிக்கப் படுவதை உறுதி செய்வதற்காக பருவநிலை மாற்றங்கள், மண் அடுக்குகளுக்கு ஏற்றவாறு மழைநீர் சேகரிப்பு அமைப்புகளை உருவாக்க அனைத்து பங்குதாரர்களையும் வலியுறுத்துவது ஆகியவை தான் முக்கிய நோக்கமாக இருக்கிறது.
  • இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து தண்ணீர் மற்றும் தண்ணீர் பாதுகாப்பு தொடர்பான விஷயங்கள் குறித்து விவாதிக்க தேர்தல் நடைபெற உள்ள மாநிலங்களைத் தவிர மற்ற மாநிலங்களில் உள்ள அனைத்து கிராம பஞ்சாயத்துகளிலும் கிராம சபைக் கூட்டங்கள் நடைபெறும். தண்ணீர் பாதுகாப்பிற்கான ‘நீர் உறுதிமொழியையும்’ கிராம சபைகள் ஏற்கும்.
  • மேலும் நதிகளை இணைப்பதன் மூலம் தண்ணீர் வரத்து அதிகமாக உள்ள பகுதிகளில் இருந்து வறட்சி மிகுந்த மற்றும் தண்ணீர் பற்றாக்குறை உள்ள பகுதிகளுக்கு நீரை கொண்டுச் செல்லும் முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் தொலைநோக்குப் பார்வையை செயல்படுத்தும் வகையில் மாநிலங்களுக்கு இடையேயான ஒத்துழைப்பின் ஆரம்பமாக இந்த ஒப்பந்தம் இருக்கும்.
  • இந்த திட்டத்தின் கீழ் கென் மற்றும் பெத்வா ஆறுகளை இணைக்கும் கால்வாய், லோயர் ஆர் திட்டம், கோத்தா குறுக்கணை,தௌதன் அணை மற்றும் பீனா வளாகம் பல்நோக்கு திட்டம் ஆகியவை உருவாக்கப்பட்டு அதன்மூலம் கென் ஆற்றில் உள்ள தண்ணீர் பெத்வா ஆற்றிற்கு எடுத்து செல்லப்படும்.
  • இதனால் ஆண்டுக்கு 10.62 லட்சம் ஹெக்டர் நிலப்பரப்பிற்கு நீர்ப்பாசனம் மற்றும் 62 லட்சம் மக்களுக்கு குடிநீர் விநியோகம்,103 மெகாவாட் நீர் மின்சக்தி போன்றவைகள் உருவாக்கப்படும்.
  • நீர் பஞ்சம் அதிகம் உள்ள பந்தல்கண்ட் பகுதி குறிப்பாக மத்தியப் பிரதேசத்தின் பன்னா, சத்தர்புர், சாகர், தாமோ, டிகாம்கர், விதிஷா, ஷிவ்புரி, ரெய்சன்,தாட்டியா ஆகிய மாவட்டங்களும், உத்தரபிரதேசத்தின் மகோபா,பண்டா, ஜான்சி மற்றும் லலித்புர் ஆகிய மாவட்டங்களும் இந்தத் திட்டத்தின் மூலம் பெருமளவில் பயனடையும்.
  • நீர் பற்றாக்குறை நாட்டின் வளர்ச்சிக்கு தடைக்கல்லாக இருக்கக்கூடாது என்பதை உறுதி செய்யும் வகையில் மேலும் பல நதிகளை இணைக்கும் திட்டங்களுக்கு செயல் படும்.
Share This Article
Exit mobile version