Contact Information

Theodore Lowe, Ap #867-859
Sit Rd, Azusa New York

We Are Available 24/ 7. Call Now.
  • மிகவும் ருசியான பிரியாணி எங்கே இருக்கும் என்று தேடி தேடி சாப்பிடுவது இங்கு பலருக்கும் பொழுதுபோக்கு நம்முடைய “Foodie” நண்பர்கள் தங்களின் பிரியாணி அனுபவத்தை சொல்லும் போதே, அடுத்த முறை அந்த ஹோட்டலில் தான் பிரியாணி சாப்பிடவேண்டும் என்று நாம் ஒரு மன கணக்கு வைத்துக் கொள்வோம். பிரியாணியை பிடிக்காதவர்கள் யாராவது உண்டா என்ன?
  • ருசியான பிரியாணி பற்றிதா நாம் பேசியிருப்போம். ஆனால் உலகிலேயே மிகவும் விலை உயர்ந்த பிரியாணி இதுதான் என் தெரியுமா உங்களுக்கு.
  • அமீரகத்தில் உள்ள பாம்பேய் பாரோ (bombay borough ) உணவகத்தில் தான் அந்த மிகவும் விலை உயர்ந்த பிரியாணி பரிமாரப்படுகிறது. இதன் பெயர் தி ராயல் கோல்ட் பிரியாணி (The Royal Gold Biryani) என்று கூறப்படும்
  • அந்த பிரியாணியில் ”23 கேரட்” உட்கொள்ளக் கூடிய தங்கம் வைக்கப்பட்டுள்ளது தான் அதில் ஸ்பெஷல். விலை என்னவாக இருக்கும் என்று கணிக்கிறீர்கள்? 1000 திராம்கள்.
  • தங்கம் மட்டும் இல்லை. இதில் தங்க இலை காபாப்கள், குங்குமப்பூ சேர்த்து சமைக்கப்பட்ட சாதம், காஷ்மீரின் செம்மறி ஆட்டுக்கறி கபாப், டெல்லியின் புகழ் பெற்ற செம்மறி ஆட்டு சாப்ஸ், ராஜ்புத்தின் சிக்கன் கபாப், முகலாயர்கள் ஸ்டைல் கோஃப்தா, மற்றும் மலாய் சிக்கன் ரோஸ்ட் போன்றவை இந்த ராயல் கோல்ட் பிரியாணி தட்டில் இருக்கும். நீங்க பசிக்காகவும், ருசியாகவும் , பிரியாணி பிரியாருக்கும் ஒரு கை பார்க்க வேண்டிய இடம் தான் இது.
Share: