நாளை முதல் வங்கிகள் செயல்படும் நேரம் குறைப்பு

Pradeepa 5 Views
1 Min Read

ஹைலைட்ஸ் :

  • வங்கிகள் நான்கு மணி நேரம் மட்டுமே செயல்படும்.
  • ஆதார் கார்டு திருத்தும் செய்வதற்க்கான பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
  • ATMகள் 24 மணி நேரமும் செயல்படும்.

கொரோனா நோய்த்தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வரும் நிலையில் தமிழக அரசு நாளை முதல் புதிய கட்டுப்பாடுகளை விதித்து உள்ளது. இன்று (ஏப்ரல் 25) தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கு அமலில் இருந்தது.

ஏப்ரல் 26 ஆம் தேதி முதல் அனைத்து வங்கிகளும் காலை 10.00 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை மட்டுமே செயல்படும். வங்கிகள் நான்கு மணி நேரம் மட்டுமே செயல்படும் என்பதால் பொதுமக்கள் அதற்ககு ஏற்றவாறு வங்கி செயல்பாடுகளை மாற்றி கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வங்கிகளில் பாஸ்புக் பதிவு மற்றும் வெளிநாட்டு ரூபாய் நோட்டுகளை மாற்றுதல், ஆதார் கார்டு பதிவு செய்தல், ஆதார் கார்டு திருத்தும் செய்வதற்க்கான பணிகளும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ATMகள் 24 மணி நேரமும் செயல்படும். வாடிக்கையாளார்கள் டிஜிட்டல் மற்றும் ஆன்லைன் சேவைகளை பயன்படுத்தி கொள்ளலாம்.

வங்கி ஊழியர்கள் கட்டாயமாக முகக்கவசம் அணிந்து இருக்க வேண்டும், பொது மக்கள் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும், கைகளை கிருமி நாசுனி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். புதிய கட்டுப்பாடுகள் அனைத்தும் நாளை முதல் ஏப்ரல் 30ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share This Article
Exit mobile version