கொரோனா வைரஸ் தொற்றுநோயின் இரண்டாவது அலை உலகம் முழுவதும் பரவி வருவதால் முகக்கவசம் அணியுமாறு கூகுல் டூடுல்(google doodle) செவ்வாய்க்கிழமை மக்களை கேட்டுக்கொண்டது. COVID-19 பாதுகாப்பு கட்டுப்பாடுகளில் முக முக்கியமான ஒன்று அனைவரும் முகக்கவசம் அணிவது. முகக்கவசம் அணிந்து உயிரைக் காப்பாற்றுங்கள்.
G-O-O-G-L-E எழுத்துக்கள் முகக்கவசம் அணிந்து உள்ளதாக காட்டப்பட்டுள்ளன. ‘எல்’ என்ற எழுத்தில் தடுப்பூசி சிரிஞ்சும் உள்ளது.
உலகமெங்கும் கொரோனா வைரஸ் தொடர்ந்து பரவி வருவதால் கட்டுப்பாடு வழிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம் கொரோனா பரவலைத் தடுக்க உதவுங்கள்” என்று கூகிள் தனது செய்தியில் தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு கூகுல் டூடுல் அறிமுகப்படுத்திய தொடரில் சுகாதாரப் பணியாளர்கள், முன்னணி தொழிலாளர்கள், விநியோக பங்காளிகள் மற்றும் துப்புரவுத் தொழிலாளர்களை அங்கீகரித்து கௌரவ படுத்தியுள்ளது.
ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் உலகமெங்கும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 131.6 மில்லியனை எட்டியுள்ளது, மேலும் இறப்புகள் எண்ணிக்கை 2.85 மில்லியனுக்கும் அதிகமாக உயர்ந்துள்ளன என்று கூறியுள்ளது.
சிஸ்டம்ஸ் சயின்ஸ் அண்ட் இன்ஜினியரிங் (சி.எஸ்.எஸ்.இ) அறிக்கையின் படி ,30,777,338 மற்றும் 555,403 என உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான கொரோனா பாதிப்பு மற்றும் இறப்புகளைக் கொண்ட நாடு அமெரிக்கா. இந்தியா (165,101), இங்கிலாந்து (127,106), இத்தாலி (111,326), ரஷ்யா (99,049), பிரான்ஸ் (97,005), ஜெர்மனி (77,070), ஸ்பெயின் (75,783), கொலம்பியா (64,293), ஈரான் (63,332), அர்ஜென்டினா (56,471), போலந்து (55,005), பெரு (53,138), தென்னாப்பிரிக்கா (52,995).