வால்நட் பயன்கள் தமிழில்

sowmiya p 2 Views
4 Min Read

அக்ரூட் பருப்புகள் வால்நட் மரத்திலிருந்து வளரும் வட்ட, ஒற்றை விதை கல் பழங்கள் ஆகும். இவை ஆரோக்கியமான கொழுப்புகள், புரதம் மற்றும் நார்ச்சத்துக்கான நல்ல ஆதாரமாகும். வால்நட் மரங்கள் கிழக்கு வட அமெரிக்காவை பூர்வீகமாகக் கொண்டுள்ளன .ஆனால் இப்போது அவை பொதுவாக சீனா, ஈரான் மற்றும் அமெரிக்காவிற்குள் கலிபோர்னியா மற்றும் அரிசோனாவில் வளர்க்கப்படுகின்றன.
வால்நட் இரண்டு தட்டையான பிரிவுகளாக பிரிக்கப்பட்டு வணிக ரீதியாக விற்கப்படுகிறது. அக்ரூட் பருப்புகள் பச்சையாகவோ அல்லது வறுத்ததாகவோ, உப்பு அல்லது உப்பு இல்லாமல் கிடைக்கின்றன.

வால்நட்டில் உள்ள சத்துக்கள்:-

  • கொழுப்பு – 0 கிராம்
  • சோடியம் – 0.2 மில்லி கிராம்
  • பொட்டாசியம் – 441 மில்லி கிராம்
  • புரதச்சத்து – 15 கிராம்
  • விட்டமின் ஏ, விட்டமின் டி, விட்டமின் பி12 மற்றும் கால்சியம் போன்ற சத்துக்கள் இந்த வால்நட்டில் உள்ளது.

வால்நட் பயன்கள்:-

  • வால்நட் உடலில் உள்ள அதிக படியான கொழுப்பை கரைத்து உடலில் ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது.
    வால்நட்டை இரவில் ஊற வைத்து காலையில் சாப்பிட்டு வந்தால் உடலுக்கு மிக ஆரோக்கியம் அளிக்கும் மற்றும் நாள் முழுவதும் உற்சாகமாக இருக்கலாம்.
  • குழந்தைகளுக்கு தினமும் 5 என்ற வீதம் கொடுத்து வந்தால் மூளையின் ஆற்றலை நன்றாக தூண்டுகிறது.
  • வால்நட்டில் உள்ள வைட்டமின் மற்றும் புரதச்சத்துக்கள் இரத்தத்தில் கலந்து மூளையே நன்கு செயல் பட வைக்கிறது.
  • வால்நட் தினமும் சாப்பிட்டு வந்தால் ஞாபக மறதியைப் போக்குகிறது.
  • பெண்கள் தினமும் ஊற வைத்த வால்நட்டை சாப்பிட்டு வந்தால் மார்பக புற்று நோயை தவிர்க்கலாம் மற்றும் கணைய புற்று நோயின் அபாயத்தையும் தடுக்கலாம்.
  • IT துறையில் வேலை செய்பவர்கள் ஷிப்ட் முறையில் வேலை செய்வதால் அதிக நபர்கள் தூக்கமின்மையால் அதிகம் பாதிக்க படுகிறார்கள்.
  • தூக்கமின்மையை போக்க தினமும் இரவில் வால்நட் பாலிலோ அல்லது சாதாரணமாகவோ சாப்பிட்டு வந்தால் தூக்கமின்மையை போக்கிவிடும்.
  • உடலில் ஏற்படும் வறட்சியை வால்நட் போக்குகிறது.
  • தோல் மற்றும் சருமத்தில் ஏற்படும் சுருக்கங்களை வால்நுட் போக்குகிறது மற்றும் சருமத்தை எப்போதும் ஈரப்பதமாக வைத்துக் கொள்ளும்.
  • வால்நட் தினமும் சாப்பிட்டு வந்தால் அஜீரண கோளாறு மற்றும் மலச்சிக்கல் போன்றவற்றை சரி செய்து வயிற்றில் உள்ள அமிலங்களை சீராக்குகிறது.
  • பித்த பையில் கற்கள் உள்ளவர்கள் தினமும் வால்நுட் சாப்பிட்டு வந்தால் படி படியாக குறைந்துவிடும்.
    தினமும் வால்நட் சாப்பிட்டு வந்தால் முதுமையை தள்ளி போடலாம்.
  • வால்நட் எடை குறைப்புக்கு மிகவும் உதவுகிறது எனவே எடை குறைக்க நினைப்பவர்கள் வால்நட் தினமும் சாப்பிட்டால் படிப்படியாக எடை குறையும்.
  • வால்நட்டில் அதிக அளவில் வைட்டமின் பி7 மற்றும் பயோட்டின் சத்துக்கள் இருப்பதால் தலை முடி உதிர்வதை தடுத்து நன்றாக வளர செய்கிறது.

வால்நட் தீமைகள்:

  • நார்ச்சத்துக்கள் நிறைந்த உணவை சாப்பிட்ட பின் வால்நட் சாப்பிட்டால் வயிற்று வலி மற்றும் அஜீரண கோளாறுகள் ஏற்படும் ஏனென்றால் வால்நட்டில் அதிக புரத சத்துக்கள் உள்ளது.
  • அளவுக்கு அதிகமாக வால்நட் சாப்பிட்டு வந்தால் உடல் எடை அதிகரிக்கும்.
  • வால்நட் அதிகமாக சாப்பிட்டு வந்தால் ஒருசிலருக்கு ஒவ்வாமை ஏற்பட்ட வாய்ப்புகள் உள்ளது எனவே மருத்துவரின் அறிவுரை பெற்ற பின் சாப்பிட தொடங்கலாம்.

வால்நட்டை வெறும் வயிற்றில் சாப்பிடலாமா (சாப்பிடும் முறை):

  • வால்நட் பருப்பை தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் இதில் உள்ள புரத சத்துக்கள் மற்றும் நல்ல கொழுப்புகள் உள்ளதால் இது உடலுக்கு தேவையான அனைத்து சக்தியையும் கொடுக்கிறது.
    காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுவதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து நோய் தொற்றில் இருந்து நம்மை பாதுகாக்கிறது. ஒரு நாளைக்கு 20 முதல் 84 கிராம் வரை சாப்பிடலாம்.

வால்நட் அழகு குறிப்புகள்:-

  • வால்நட்டை கொஞ்சம் அரைத்து சிறிது பால் சேர்த்து முகத்தில் தடவி வந்தால் சருமத்தில் உள்ள அழுக்குகளை போக்கி முகத்தை பளபளப்பாக வைக்க உதவுகிறது.
  • வால்நட் எந்த நேரத்தில் சாப்பிட வேண்டும்:

சாப்பிட்ட 2 மணி நேரத்திற்கு பின் வால்நட் சாப்பிடலாம்.

  • நீங்கள் இரவில் சாப்பிடுபவராக இருந்தால் தூங்குவதற்கு 2 மணி நேரத்திற்கு முன் சாப்பிட வேண்டும். காலையில் வெறும் வயிற்றில் ஊறவைத்த வால்நட் சாப்பிட்டால் நல்ல பலனை தரும்.

வால்நட் எங்கு கிடைக்கும்:

  • வால்நட் அனைத்து சித்த மருந்து கடைகளிலும் கிடைக்கிறது. ஒரு சில ஷாப்பிங் மாலில் கிடைக்கிறது.

வால்நட் தேனில் ஊற வைத்து சாப்பிடலாமா:

  • வால்நட்டில் சிறிதளவு தேன் விட்டு சிறிதளவு எலுமிச்சை சாரை சேர்த்து மூன்று வேலை ஒரு ஸ்பூன் என சாப்பிட்டு வந்தால் நல்ல பலனை தரும்.

 

Share This Article
Exit mobile version