‘வாத்தி கம்மிங்’ பாடலுக்கு செம ஆட்டம் போட்ட கதாநாயகி

Pradeepa 4 Views
1 Min Read
தளபதி விஜய் நடிப்பில் வெளியான ‘மாஸ்டர்’ படத்தில் இடம் பெற்ற ‘வாத்தி கம்மிங்’ பாடல் தமிழ்நாட்டைக் கடந்து வட இந்தியாவிலும் பரவி வருகிறது. இந்த பாடல் பிரபலம் ஆனதிற்கு அஷ்வின் உள்ளிட்ட சில விளையாட்டுப் பிரபலங்களுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும்.

பல சினிமா பிரபலங்களும் அந்தப் பாடலுக்கு நடனமாடி அவர்களது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார்கள். அந்த வரிசையில் விஜய்யின் முன்னாள் திரைப்படமான ‘நெஞ்சினிலே’ படத்தின் கதாநாயகியான இஷா கோபிகர் ‘வாத்தி கம்மிங்’ பாடலுக்கு செம ஆட்டம் போட்டு அந்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றியுள்ளார்.

விஜய் நடிப்பில் 1999 ஆம் ஆண்டு வெளிவந்த ‘நெஞ்சினிலே’ திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் இஷா கோபிகர். அதன் பின் ‘நரசிம்மா’ திரைப்படத்தில் விஜயகாந்த் ஜோடியாக நடித்துள்ளார். 20 வருட இடைவெளிக்குப் பிறகு தற்போது சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘அயலான்’ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

மாஸ்டர் திரைப்படத்தின் ‘வாத்தி கம்மிங்’ பாடலுக்கு இஷா கோபிகர்வின் நடனம் விஜய் ரசிகர்களை கவரும் அளவிற்கு சிறப்பாக உள்ளது.

Share This Article
Exit mobile version