18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி இன்று தொடங்குகிறது

1 Min Read

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. கொரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. கொரோனா தொற்று காரணமாக பாதிக்கப்படுயோரின் எண்ணிக்கையும் உயிரிழப்பு எண்ணிக்கையும் குறையவில்லை.

பரவலை தடுக்க 45 வயதிற்கு மேற்பட்டவருக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மே 1 ஆம் தேதி முதல் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும் என்று மாநில அரசு அறிவித்து இருந்தது.

கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டதின் காரணமாக 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தாமதம் ஆனது. 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி இன்று தொடங்குகிறது. இந்த திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பெருமாநல்லூரில் இன்று தொடங்கி வைக்கிறார்.

தமிழக அரசு தடுப்பூசி நிறுவனங்களிடம் இருந்து 10,62,000 டோஸ் மருந்துகளை கொள்முதல் செய்துள்ளது. அவற்றில் 9,62,000 தடுப்பு மருந்துகள் தமிழகம் வந்துள்ளது. இதில் 1,66,000 கோவாக்சின் தடுப்பூசிகளும், 7,96,000 டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகளும் அடங்கும்.

 

Share This Article
Exit mobile version