Uses of Peach Fruit

sowmiya p 4 Views
2 Min Read

பீச் பழங்களின் பூர்வீகம் சீனா என்றாலும் குளிர் காலத்தில் பெரும்பாலான நாடுகளில் பயிரிடப்படுகிறது. பீச் பழத்தில் உள்ள ஆரோக்கிய நலன்களை ஆராய்ச்சி யாளர்கள் பல ஆராய்ச்சிகளுக்குப் பின்பு தெரியப் படுத்தி இருக்கின்றனர்.

  • பீச் பழத்தில் வைட்டமின் ஏ மற்றும் சி அதிகமுள்ள தால் இந்தப் பழத்தை வைத்து ஃபேசியல் செய்தால் சருமச் சுருக்கங்கள் நீங்குவதோடு, சருமத் துளைகளில் உள்ள அடைப்புகள் நீங்கி சுத்தமாகவும் முகம் பொலிவுடனும் இருக்கும்.
  • பீச் பழத்துடன் முட்டையின் வெள்ளைக் கருவைச் சேர்த்து முகத்திற்குப் போட்டால் முகத்தில் கலர் மாற்றங்கள் ஏற்படும். பொதுவாக பீச் பழங்கள் முடி உதிர்வதைக் கட்டுப்படுத்தும்.
  • தொற்றுநோய்கள், இதய நோய்கள் ஆகியவற்றைக் குணப்படுத்தி, இரத்த ஓட்டத்தில் உள்ள கொழுப்பின் அளவைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்கிறது. கீழ்வாதம். ரூமாட்டிக் நோயால் அவதிப்படுகின்றவர்கள் பீச் பழத்தின் மூலம் தீர்வு காண முடியும்.
  • வலிப்போடு கூடிய இருமல் இருப்பவர்களுக்கு பீச் பழத்தில் தேநீர் தயாரித்து பயன்படுத்துகையில் அதிக செயல்திறன் மிக்கதாக உள்ளது.
  • பீச் பழங்கள் ஆற்றலை அதிகரிக்கக்கூடிய சிறந்த பழங்களில் ஒன்று. ஏனெனில் மூலதனமாக கார்போஹைட்ரேட் கொண்டிருக்கிறது.
  • இதில் பொட்டாசியம், இரும்பு, ஃப்ளோரைடு போன்ற சத்துக்கள் அதிக அளவு உள்ளன. உடலுக்குத் தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை தரக்கூடியது.
  • பீச் பழத்தில் வைட்டமின் பி6 இருப்பதால் கர்ப்பிணிகள் சாப்பிட வேண்டிய பழங்களில் ஒன்றாக உள்ளது.
  • மன அழுத்தம், மனநோயினால் பாதிக்கப்பட்டு இருப்பவர்களை மீட்க பீச் பழங்கள் உதவுகின்றன. பீச் பழங்களை உட்கொள்வதால் நரம்பு மண்டலம் மூலமாக நரம்பின் செல்களை பாதுகாக்கிறது.
  • மேலும் சிறுநீரகத்தில் உருவாகும் கல் மற்றும் கட்டிகளை, பீச் பழம் சாப்பிடுவதால் தடுக்க முடியும்.
  • கோடையில் வெளியில் சென்று களைப்புடன் வந்தால் பீச் பழத்தினைச் சாப்பிடலாம். ஏனெனில் இதில் நீர்ச்சத்து அதிகம் கொண்ட பீட்டா கரோட்டின் இருப்பதால் உடல் வறட்சியை போக்குகிறது.
  • இது மலமிளக்கியாக செயல்படுவதோடு மட்டு மல்லாமல், சிறுநீரகங்கள் மற்றும் சிறுநீரகப்பையில் உள்ள நச்சுக்களை நீக்கவும் உதவுகிறது.
Share This Article
Exit mobile version