கொரோனா வைரஸ் பரவலைக் குறைக்க தமிழக அரசு கடந்த ஆண்டு மார்ச் மாதம் ரயில் சேவையை முற்றிலும் நிறுத்தப்பட்டது. இந்நிலையில் சிறப்பு ரயில்கள் மட்டுமே குறிப்பிட்ட எண்ணிக்கையில் இயக்கப்பட்டு வந்தது.
இதற்காக முன்பதிவு செய்த டிக்கெட்களை வாங்க வேண்டும். உரிய ஆவணங்களை சமர்ப்பித்த பின்னரே டிக்கெட் வழங்கப்பட்டது. இந்நிலையில் முன்பதிவில்லா ரயில் சேவை எப்போது தொடங்கப்படும் என்று தமிழக மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு இருந்தது.
இந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக முன்பதிவில்லா ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே முடிவு எடுத்துள்ளது. அதன் தொடக்கமாக வரும் மார்ச் 17ஆம் தேதி முதல் எந்தெந்த பகுதிகளுக்கு முன்பதிவில்லா ரயில்கள் இயக்கப்படுகின்றன என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இவை எக்ஸ்பிரஸ் அல்லது மெயில் பயணக் கட்டணத்துடன் பின்வரும் வழித்தடங்களில் இயக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
- ரயில் எண் 06867 / 06868 விழுப்புரம் முதல் மதுரை வரை செல்லும் விழுப்புரம் சிறப்பு ரயில்; 10 செகண்ட் க்ளாஸ் பெட்டிகளுடன் முன்பதிவில்லா டிக்கெட்கள் மூலம் பயணிக்கும் வகையில் இயக்கப்படவுள்ளது.
- ரயில் எண் 06087 / 06088 அரக்கோணம் முதல் சேலம் வரை செல்லும் அரக்கோணம் MEMU ரயில்; 2 first கிளாஸ் கம் செகண்ட் க்ளாஸ் சிட்டிங் பெட்டிகள் மற்றும் 6 செகண்ட் க்ளாஸ் பெட்டிகளுடன் இயக்கப்படவுள்ளது.
- ரயில் எண் 06115 / 06116 சென்னை எழும்பூர் முதல் புதுச்சேரி வரை செல்லும் சென்னை எழுப்பூர் சிறப்பு ரயில்; 2 செகண்ட் க்ளாஸ் சேர் கார் பெட்டிகள், 7 ஜெனரல் செகண்ட் க்ளாஸ் பெட்டிகள் என முன்பதிவு மற்றும் முன்பதிவில்லா பெட்டிகளுடன் இயக்க உள்ளது.
இந்த ரயில்களுக்கான டிக்கெட்கள் அனைத்து ரயில் நிலையங்களிலும் விரைவில் கிடைக்கும். சீசன் டிக்கெட்கள் வரும் மார்ச் 15ஆம் தேதி முதல் வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.