“முதல் காதல்” – புதிய டி.வி.எஸ் ஸ்கூட்டி பெப் + தமிழில் புதிய லோகோவைப் பெறுகிறது
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் சிறப்பு ஸ்கூட்டி பெப் ப்ளஸ் ஸ்கூட்டரை அறிமுகம் செய்துள்ளது. தமிழகத்தை சார்த்த டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் பொங்கல் பண்டிகையின்போது ஸ்கூட்டி பெப் ப்ள்ஸ ஸ்கூட்டரின் ஸ்பெஷல் எடிசன் மாடலை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது.
இந்த மாடல் ஸ்கூட்டி பெண்கள் எளிமையாக இந்தியாவில் பெண்கள் பயன்படுத்துவதற்கான மிகச் சிறந்த ஸ்கூட்டர் மாடலாக டிவிஎஸ் ஸ்கூட்டி பெப் ப்ளஸ் இருந்து வருகிறது. எளிமையான டிசைன், கையாள்வதற்கு வசதியான ஸ்கூட்டராக இருப்பதுடன் விலையிலும் பெண்களுக்கு ஏதுவான மாடலாக இருக்கிறது.
இந்த மாடல் தமிழ் பெயரிலேயே வெளியிடப்பட்டுள்ளது. இதுவரை தமிழ் பெயரில் வெளியிடப்பட்ட முதல் சிறப்பு பதிப்பு மாடலாகவும் இருக்கும் என்று தெரிகிறது.
‘முதல் காதல்’ என்ற வாசகம் ஸ்கூட்டரின் பக்கவாட்டு பேனல்களில் கொடுக்கப்பட்டு இருக்கிறது. முதல்முறையாக தமிழ் பெயரில் வந்துள்ள ஸ்கூட்டர் மாடலாகவும் குறிப்பிடப்படலாம். இந்த வாசகம் வாடிக்கையாளர்களை பெரிதும் கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஸ்கூட்டருக்கு ரூ.56,085 சென்னை எக்ஸ்ஷோரூம் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. டிவிஎஸ் ஸ்கூட்டி பெப் ப்ளஸ் முதல் காதல் எடிசன் மாடல் பழுப்பு, சாம்பல், கருப்பு என மூவர்ண கலர் மற்றும் அசத்தலான பாடி கிராஃபிக்ஸ் ஸ்டிக்கர் உடன் மிகவும் கவர்ச்சிகரமாக இருக்கிறது. இருக்கையும் கூட பழுப்பு – கருப்பு வண்ணங்களில் இருக்கிறது.
முதல் காதல் எடிசன் மாடலில் பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையான 87.8 சிசி எஞ்சின் உள்ளது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 5.4 பிஎஸ் பவரையும், 6.5 என்எம் டார்க் திறனையும் வழங்கும். இந்த ஸ்கூட்டரின் எஞ்சின் ET-FI ஈக்கோத்ரஸ்ட் என்ற தொழில்நுட்பத்தை பெற்றிருப்பதால், அதிக மைலேஜ் மற்றும் சிறப்பான செயல்திறனை வழங்கும். இந்த ஸ்கூட்டர் 93 கிலோ எடை கொண்டது குறிப்பிடத்தக்கது.