இன்று முதல் 29ஆம் தேதி வரை ரயில்கள் ரத்து

Pradeepa 1 View
1 Min Read

சென்னையில் இருந்து குருவாயூர் – எழும்பூர் இடையே இயக்கப்படும் சிறப்பு ரயில்கள் நெல்லை,எழும்பூர் செங்கொட்டை பகுதியில் ரத்து செய்யப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில் மதுரை அருகே திருமங்கலம் துலுக்கப்பட்டி இடையே தண்டவாளம் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் கீழ்கண்ட ரயில்கள் பகுதியாகவும் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

(வண்டி எண்:06128) குருவாயூர் -எழும்பூர் இடையே இயக்கப்படும் சிறப்பு ரயில்கள் இன்று முதல் 29 ஆம் தேதி வரை நெல்லை-எழும்பூர் இடையே ரத்து செய்யப்படுகிறது.

மறுமர்க்கமாக எழும்பூர்-குருவாயூர் (வண்டி எண் :06127) இடையே இயக்கப்படும் சிறப்பு ரயில் வருகிற 21ஆம் முதல் 30 ஆம் தேதி வரை எழும்பூர் -நெல்லை பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

எழும்பூர்-செங்கோட்டை (வண்டி எண் :06181) இடையே இயக்கப்படும் ரயில் வருகிற 25 ஆம் முதல் 29 ஆம் தேதி வரை மானாமதுரை-செங்கோட்டை (வண்டி எண் :06182)இடையே இயக்கப்படும் சிறப்பு ரயில் 26 ஆம் முதல் 28 ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.

மேலும் விவரங்களுக்கு ரயில்வே பயணிகள் ஹெல்ப் லைன் எண் 139 தொடர்ப்புகொள்ளங்கள்.

Share This Article
Exit mobile version