28ஆம் தேதி வரை தமிழகத்தில் ரயில்கள் ரத்து

Pradeepa 1 View
3 Min Read

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ரயில் சேவை முற்றிலும் ரத்து செய்யப்பட்டு இருந்த நிலையில் சிறப்பு ரயில் சேவை மட்டும் இயக்கப்பட்டு வருகிறது. கொரோனா பரவல் குறைந்து உள்ளதால் ரயில்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

இரட்டை ரயில் பாதை அமைப்பதற்க்கான பணிகள் தொடங்க உள்ளதால் தென் மாவட்டங்கள் மற்றும் அண்டை மாநிலங்களுக்குச் செல்லும் ரயில்கள் ரத்து செய்யப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதாவது திருநெல்வேலி – கங்கைகொண்டான் மற்றும் கோவில்பட்டி – கடம்பூர் இடையில் இரட்டை ரயில் பாதைகள் அமைப்பதற்க்கான பணி நடைபெற்று வருகிறது.

  • ரயில் எண் 02627/02628 திருச்சி முதல் திருவனந்தபுரம்(திருச்சி சிறப்பு ரயில்)வரை செல்லும் வண்டி பிப்ரவரி 19 முதல் 28ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது.
  • ரயில் எண் 02631 சென்னை முதல் திருநெல்வேலி (நெல்லை சிறப்பு ரயில்)வரை செல்லும் வண்டி. மதுரை மற்றும் திருநெல்வேலி இடையில் செல்லும் ரயில்கள் மட்டும் பிப்ரவரி 23 முதல் 27ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.
  • ரயில் எண் 02632 திருநெல்வேலி முதல் சென்னை (நெல்லை சிறப்பு ரயில்)வரை செல்லும் வண்டி. திருநெல்வேலி மற்றும் மதுரைக்கு இடையில் செல்லும் ரயில்கள் மட்டும் பிப்ரவரி 24 முதல் 28ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.
  • ரயில் எண் 06321/06322 நாகர்கோவில் முதல் கோயம்புத்தூர் (நாகர்கோவில் சிறப்பு ரயில்)வரை செல்லும் வண்டி. நாகர்கோவில் மற்றும் மதுரைக்கு இடையில் செல்லும் ரயில்கள் மட்டும் பிப்ரவரி 24 முதல் 28ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.
  • ரயில் எண் 07235 பெங்களூரு முதல் நாகர்கோவில் வரை செல்லும் சிறப்பு ரயில். விருதுநகர் மற்றும் நாகர்கோவிலுக்கு இடையில் செல்லும் ரயில்கள் மட்டும் பிப்ரவரி 23 முதல் 27ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.
  • ரயில் எண் 07236 நாகர்கோவில் முதல் பெங்களூரு வரை செல்லும் சிறப்பு ரயில். நாகர்கோவில் மற்றும் விருதுநகர் ரயில் நிலையங்களுக்கு இடையில் செல்லும் ரயில்கள் மட்டும் பிப்ரவரி 24 முதல் 28 வரை ரத்து செய்யப்படுகிறது.
  • ரயில் எண் 02667 நாகர்கோவில் முதல் கோயம்புத்தூர்வரை செல்லும் சிறப்பு ரயில். நாகர்கோவில் மற்றும் மதுரைக்கு இடையில் செல்லும் ரயில்கள் பிப்ரவரி 26, 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது.
  • ரயில் எண் 02668 கோயம்புத்தூர் முதல் நாகர்கோவில் வரை செல்லும் சிறப்பு ரயில். மதுரை மற்றும் நாகர்கோவிலுக்கு இடையில் செல்லும் ரயில்கள் மட்டும் பிப்ரவரி 25, 26, 27 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது.
  • ரயில் எண் 06236/06235 மைசூரு முதல் தூத்துக்குடி வரை செல்லும் சிறப்பு ரயில். மதுரை மற்றும் தூத்துக்குடி இடையில் வரும் ரயில்கள் மட்டும் பிப்ரவரி 27, 28 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது.
  • ரயில் எண் 06071 தாதர் முதல் திருநெல்வேலி வரை செல்லும் ரயில். விருதுநகர் மற்றும் திருநெல்வேலிக்கு இடையில் வரும் ரயில்கள் மட்டும் பிப்ரவரி 25ஆம் தேதி மட்டும் ரத்து செய்யப்படுகிறது.
  • ரயில் எண் 06127 சென்னை முதல் குருவாயூர் வரை செல்லும் சிறப்பு ரயில். பிப்ரவரி 24, 25, 26 மற்றும் 28 ஆகிய தேதிகளில் விருதுநகர், ராஜாபாளையம், தென்காசி, அம்பாசமுத்திரம், திருநெல்வேலி வழியாக வரும் ரயில்கள் மாற்றம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Share This Article
Exit mobile version