மேலும் டெல்லியில் பதற்றமான சூழல் உருவாகியது. டெல்லியில் சில இடங்களில் தற்காலிகமாக இணைய சேவை நிறுத்தப்பட்டதாகவும் தெரிகிறது. டெல்லியில் செங்கோட்டைக்குள் நுழைந்த விவசாயிகள் தேசியக் கொடி ஏற்றும் இடத்தில், விவசாயிகளின் கொடியை ஏற்றினர். அங்கு நடந்த வன்முறையில் 83 போலீசார் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில் டெல்லியில் நேற்று விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியில் நடந்த வன்முறைச் சம்பவங்கள் குறித்து டெல்லி போலீசார் 15 முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்துள்ளது. இதில் கிழக்கு மண்டலத்தில் 5 முதல்தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.