ஓராண்டுக்குள் டோல்கேட்டுகள் அகற்றப்படும் – நிதின் கட்கரி

Pradeepa 1 View
1 Min Read

மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி, இன்னும் ஓராண்டுக்குள் டோல்கேட்டுகள் நீக்கப்படும் ஜி.பி.எஸ்., முறையிலான சுங்க கட்டணம் வசூலிப்பது அமலுக்கு வரும் என்றார்.

பாராளுமன்றத்தில் கேள்வி நேரத்தின் போது இது குறித்து பேசிய அமைச்சர் நிதின் கட்கரி, “ஓர் ஆண்டுக்குள் நாட்டிலுள்ள அனைத்து டோல்கேட்டுகளும் அகற்றப்படும் என்று உறுதியளித்தார். அதற்கு பதிலாக ஜி.பி.எஸ் வழியாக கட்டண வசூலிக்கப்படும். ஜி.பி.எஸ் இமேஜிங் முறையில் பணம் பெற்றுக்கொள்ளப்படும்.” என்றார்.

மேலும், “93 சதவீத வாகனங்கள் பாஸ்டேகைப் பயன்படுத்தி கட்டணம் செலுத்துகிறார்கள். மீதமுள்ள 7 சதவீத வாகனங்கள் இரண்டு மடங்கு கட்டணம் செலுத்திய பிறகும் பாஸ்டேகை எடுக்கவில்லை.” என்றார்.

இதுவரை பாஸ்டேக் எடுக்காத வாகனங்கள் குறித்து விசாரிக்க போலீசாருக்கு அறிவுறுத்தியதாக கூறினார். வாகனங்களில் பாஸ்டேக் பொருத்தாவிட்டால், ஜிஎஸ்டி ஏய்ப்பு வழக்குகளை சந்திக்க வேண்டும் என்றார். சுங்கச்சாவடிகளில் 2016 ஆம் ஆண்டு முதல் பாஸ்டேக் மூலம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அது கடந்த பிப்ரவரி16 முதல் கட்டாயமானது. இதன் மூலம் சுங்கச்சாவடிகள் நெரிசல் குறைகிறது. பாஸ்டேக் இல்லை என்றால் இரு மடங்கு கட்டணம் வசூலிக்கபடும்.

Share This Article
Exit mobile version