இன்றைய தலைப்பு செய்திகள் -11-08-2021

Vijaykumar 1 View
1 Min Read

வளர்ச்சித் திட்டங்களின் பயன்கள் அனைத்து மக்களுக்கும் கிடைப்பதை உறுதி செய்ய நடவடிக்கை. ** உஜ்வாலா இரண்டாம் கட்ட திட்ட தொடக்க விழாவில் பிரதமர் நரேந்திர மோதி பேச்சு.

ஓபிசி பிரிவினருக்கான பட்டியலை மாநில அரசுகளே தயாரித்துக் கொள்ள அனுமதி வழங்கும் மசோதா – நீண்ட விவாதத்திற்குப் பிறகு மக்களவையில் நிறைவேற்றம்.

3) ஆப்கானிஸ்தானில் உள்ள இந்தியர்கள் உடனடியாக நாடு திரும்ப மத்திய அரசு அறிவுறுத்தல் – அரசுப் படைகளுடன் தாலிபன்களின் மோதல் அதிகரித்து வருவதால் நடவடிக்கை

பூமி கண்காணிப்பு செயற்கைக் கோளுடன் நாளை விண்ணில் பாய்கிறது ஜிஎஸ்எல்வி எஃப்-10 ராக்கெட் – அனைத்து ஏற்பாடுகளுடன் கவுண்ட் டவுன் தொடங்கியது.

தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் வருகிற 13-ம் தேதிமுதல் செப்டம்பர் 21-ம் தேதிவரை 29 நாட்கள் நடைபெறும் – பேரவைத் தலைவர் அப்பாவு அறிவிப்பு.

கிரீஸ் நாட்டின் ஈவியா தீவில் பரவி வரும் காட்டுத் தீயால் இரண்டாயிரம் பேர் வெளியேற்றம் – பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் பிரிட்டன் நாடுகள் உதவி.

Share This Article
Exit mobile version