இன்று தங்கம் விலை சற்று உயர்வு

Selvasanshi 3 Views
1 Min Read

இன்று ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ.24 உயர்ந்து ரூ.33,880-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ. 4,235 க்கு விற்கப்படுகிறது

உலகம் முழுவதுமே முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடுகளின் பக்கம் திரும்புகிறார்கள். அமெரிக்க டாலர்கள்,பங்குச்சந்தை,ரியல் எஸ்டேட் ஆகியவற்றில் முதலீடு செய்திருந்த முதலீட்டாளர்கள் அனைவரும் தற்போது தங்கத்தில் முதலீடு செய்யத் தொடங்கி உள்ளார்கள்.

இதனால் தங்கத்தின் தேவை அதிகரித்து, அதன் விலையும் உயர்ந்து வருகிறது. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தற்போது தொழில்துறை தேக்கம் பற்றி பீதி நிலவி வரும் நிலையில் தங்கத்தின் விலை சற்று ஏற்ற இறக்கதத்துடன் காணப்படுகிறது.

ஏற்கனவே 2021-22ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டில் தங்கம், வெள்ளிப் பொருட்களின் மீதான வரி குறைக்கப்பட்டு இருந்தது.

கடந்த சில வாரங்களாகத் தங்கத்தின் விலை தொடர்ந்து சரிந்து வந்தது. இந்தநிலையில் தங்கத்தின் விலை இன்று சற்று அதிகரித்துள்ளது .

ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ரூ.3 உயர்ந்து ரூ.4,235-க்கு விற்கப்படுகிறது.

மேலும் இன்று 8 கிராம் தங்கத்தின் விலை ரூ.24 உயர்ந்து ரூ.33,880–க்கு விற்பனை செய்யப்படுகிறது .

Share This Article
Exit mobile version