இன்று முதல் தபால் வாக்குகள் பெறும் பணி தொடக்கம்

Selvasanshi 1 View
1 Min Read

சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தபால் வாக்குகளை நேரடியாக சம்மந்தப்பட்டவர்கள் வீடுகளுக்கே சென்று வாக்குகள் சேகரிக்கும் பணி இன்று காலை சென்னையில் தொடங்கியது.

சென்னையில், 80 வயதிற்கு மேற்பட்டவர்கள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் தபால் வாக்குகளை இன்று முதல் 31-ம் தேதி வரை 7 நாள்களுக்கு வீடுகளுக்கு சென்று வாக்குகள் பெறப்பட உள்ளதாக தேர்தல் அலுவலரும் மாநகராட்சி ஆணையருமான பிரகாஷ் தெரிவித்துள்ளார். இதற்காக மாநகராட்சி சார்பில் 70 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

மாநகராட்சி சார்பில் ஒரு குழு நாள் ஒன்றுக்கு 15 பேரிடம் தபால் வாக்குகள் பெற உள்ளதாக தேர்தல் அலுவலரும் மாநகராட்சி ஆணையருமான பிரகாஷ் கூறியுள்ளார்.

மேலும் இவர் வாக்கு ரகசியம் காக்கப்பட பல்வேறு அறிவுறுத்தல்கள் மேற்கொண்டு உள்ளதாகவும் தெரிவித்து இருக்கிறார்.

சென்னையில் மொத்தம் 7300 பேர் அஞ்சல் வாக்களிக்க தகுதியுடையவர்களாக இருக்கிறார்கள். இதில் 80 வயதானவர்கள் 6,992 பேர், மாற்றுத் திறனாளிகள் 308 பேர் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்து இருக்கிறது.

மேலும் இனி வரும் நாட்களில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்கள் முழு உடல் கவசத்துடன் சென்று வாக்களிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அவர் கூறினார்.

 

Share This Article
Exit mobile version