இன்று ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயிலை இயக்க ரயில்வே முடிவு

Vijaykumar 2 Views
1 Min Read
  • கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க ஆக்சிஜன் எனப்படும் பிராணவாயு தேவைப்படுகிறது.
  • இதனால் நாடு முழுவதும் ஆக்சிஜன் சிலிண்டர்களின் தேவை அதிகரித்து வரும் நிலையில் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் பிரதமர் மோடி ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிக்க உத்தரவிட்டுள்ளார்.
  • நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் ஆக்சிஜன் சிலிண்டர்களின் தேவை அதிகரித்து வரும் நிலையில் பல மாநிலங்களுக்கு ஆக்சிஜன் சிலிண்டர்கள் சென்று சேர தாமதம் ஆகிறது.
  • இந்தியா முழுவதும் ஆக்சிஜன் சிலிண்டர்களை எடுத்துச் செல்ல ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் சிறப்பு ரயிலை ரயில்வே துறை இயக்க உள்ளது.
  • முதல் கட்டமாக மஹாராஷ்டிராவுக்கு இன்று மருத்துவ திரவ ஆக்சிஜன் சிலிண்டர் எடுத்துச் செல்ல உள்ளன.
  • இன்னும் சில நாட்களில் இந்தியா முழுவதும் ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படும்’ என்று ரயில்வே உயர் அதிகாரி கூறியுள்ளார்.
  • இதற்கிடையில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் வகையில் டெல்லியில் இரண்டு ரயில் நிலையங்களில் தலா இரண்டு ஆக்சிஜன் சிலிண்டர்களுடன் 50 ரயில் பெட்டிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக ரயில்வே துறை தெரிவித்துள்ளது.

ஆக்சிஜன் எடுத்து ரயில் பெட்டிகளில் வெப்பத்தை குறைக்க சொட்டு நீர் முறை அமல்படுத்தப்பட்டுள்ளது.

Share This Article
Exit mobile version