இன்று பெட்ரோல், டீசல் விலை சற்று குறைந்துள்ளது

Selvasanshi 8 Views
1 Min Read

கடந்த 24 நாட்களாக மாற்றமில்லாமல் நீடித்து வந்த பெட்ரோல், டீசல் விலை இன்று சற்று குறைந்துள்ளது.

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மாற்றி அமைத்து கொள்ள மத்திய அரசு சார்ப்பில் எண்ணெய் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு இருக்கிறது.

இதன்படி, தினமும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரத்தை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றி அமைத்து கொண்டு வருகிறது.

பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடந்த 24 நாட்களாக எந்த மாற்றமும் இல்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.93.11-க்கு விற்கப்பட்டது.

அதேப்போல் ஒரு லிட்டர் டீசல் ரூ.86.45-க்கு விற்கப்பட்டது. இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை சற்று குறைந்து இருக்கிறது.

பெட்ரோல் மற்றும் டீசல் விலை இந்த ஆண்டு ஆரம்பத்தில் கடுமையாக உயர்ந்து வந்த நிலையில், கடந்த 24 நாட்களாக மாற்றம் ஏதும் இல்லாமல் இருந்தது.

இந்த நிலையில் இன்று விலை குறைந்திருப்பது வாகன ஓட்டிகளை நிம்மதி அடைய செய்துள்ளது.

சர்வதேசஎண்ணெய் நிறுவனங்கள் இன்று வெளியிட்ட அறிவிப்பில், இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் 16 காசுகள் குறைந்து ரூ.92.95-க்கும், டீசல் விலை 16 காசுகள் குறைந்து ரூ.86.29-க்கும் விற்பனையாகும் என்று தெரிவித்திருந்தது .

இந்தியாவில் 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் வேளையில் பெட்ரோல், டீசல் விலை மேலும் குறையும் என்று மக்கள் எதிர்பார்த்து கொண்டு இருக்கிறார்கள்.

Share This Article
Exit mobile version