- சென்னையில் 15 நாட்களுக்கு பிறகு, பெட்ரோல் மற்றும் டீசல் விலை சற்று குறைந்து இருக்கிறது.
- நாடு முழுவதும் சமீபகாலமாக பெட்ரோல், டீசல் விலை முயல் வேகத்தில் அதிகரித்து வந்தது.
- தற்போதுபெட்ரோல், டீசல் விலை ஆமை வேகத்தில் குறைந்தும் வருகிறது.
- அந்த வகையில் 15 நாட்களுக்குப் பிறகு சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலை சற்று குறைந்துள்ளது.
- சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் 15 காசுகள் குறைந்து, 92 ரூபாய் 43 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.
- அதேபோல், ஒரு லிட்டர் டீசல் விலை 13 காசுகள் குறைந்து, 85 ரூபாய் 75 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.
பெட்ரோல், டீசல் விலையின் இன்றைய நிலவரம்
