நாடு முழுவதும் அதிவேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் இரண்டாவது அலையை கட்டுப்படுத்த மாநில அரசுகள் ஊரடங்கு அமுல்படுத்தியுள்ளது. இந்நிலையிலும், பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றங்கள் ஏற்பட்டு தான் வருகிறது.
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில், பெட்ரோல், டீசல் விலைகளை நிர்ணயித்துக்கொள்ள எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
அந்த வகையில் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை தினமும் நிர்ணயித்து வருகிறது.
அதன்படி, விடுமுறை நாளான இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை சற்று அதிகரித்துள்ளது. ஒரு லிட்டர் பெட்ரோல் விலை இன்று 24 காசுகள் உயர்ந்து ரூ. 96.23க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு லிட்டர் டீசல் விலை இன்று 26 காசுகள் உயர்ந்து ரூ. 90.38 க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த சில நாட்களாக சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.