தமிழகத்தில் இன்றிலிருந்து இரவு நேர ஊரடங்கு-கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்

Vijaykumar 3 Views
3 Min Read
  • கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தமிழக அரசு அறிவித்துள்ள, இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட புதிய கட்டுப்பாடுகள் அனைத்தும் இன்றிலிருந்து நடைமுறைக்கு வருகின்றன.
  • பொதுமக்கள் விரும்பி செல்லும் கோடை சுற்றுலா தலங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதால் மக்களின் வருகை இல்லாமல் வெறிச்சோடி காட்சியளிக்கின்றன.
  • கொரோனா இரண்டாவது பரவலில் மாட்டிக்கொண்டு தவித்து வரும் தமிழகதில், ஒரே நாளில் 10ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
  • தமிழக அரசானது கொரோனாவை கட்டுக்குள் கொண்டுவர இரவு நேர ஊரடங்கு போன்ற பல கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.
  • இன்று இரவு முதல் தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமலாக உள்ளது. இரவு 10 மணி முதல் காலை 4 மணி வரை ஊரடங்கு அமல்படுத்துவதால் இரவு நேரங்களில் பொதுமக்கள் பயணம் செய்வதற்கும், தனியார்(ம) பொது பேருந்து, வாடகை ஆட்டோ, டாக்ஸி போன்ற தனியார் வாகன சேவைக்கு அனுமதி அளிக்கப்படாது .
  • வெளி மாநிலம் மற்றும் மாவட்டங்களுக்கு இடையேயான இரவு நேர போக்குவரத்திற்கும் அனுமதி கிடையாது.
  • இரவு நேரங்களில் அவசர மருத்துவ தேவை, விமானம் மற்றும் ரயில் நிலையங்களுக்குச் செல்ல வாடகை ஆட்டோ, டாக்ஸி, தனியார் வாகனதிற்றுக்கு மட்டும் அனுமதி தரப்பட்டுள்ளது.
  • அத்தியாவசியப் பணிகளான பால் விநியோகம், மருந்தகம், பத்திரிகை விநியோகம், ஆம்புலன்ஸ், அமரர் ஊர்தி போன்ற மருத்துவம் தொடர்பான பணிகள் இரவு நேரங்களில் தொடர்ந்து செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது.
  • மேலும், இரவு நேரங்களில் சரக்கு வாகனங்கள், எரிபொருள் வாகனங்கள் போன்றவை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
  • இரவு நேரங்களில் ஊடகத்தில் பணிகள் செய்யவும், அத்தியாவசிய பொருட்கள் தயாரிக்கும் ஆலைகள் நடத்தவும் அனுமதி தரப்பட்டுள்ளது.
  • பெட்ரோல், டீசல் பங்குகள் தொடர்ந்து செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஊடகம் சார்த்த பணிகள்,பத்திரிகைத் துறையினர் தொடர்ந்து இரவில் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
  • மாநிலத்திலுள்ள அனைத்துச் சுற்றுலா தலங்களுக்கும், உள்ளூர் மற்றும் வெளியூர்களுக்கு பயணிக்கும், சுற்றுலா பயணிகளுக்கும், கடற்கரைப் பகுதிகளுக்கும் செல்லவும் பொதுமக்களுக்குத் தடை விதித்துள்ளது
  • பொது இடங்களான பூங்காக்கள், உயிரியல் பூங்காக்கள், அருங்காட்சியகங்களில் பொதுமக்கள் செல்ல அனுமதி கிடையாது.
  • தமிழக அரசு விதித்துள்ள புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளதால் தமிழகத்தில் உள்ள புகழ்பெற்ற சுற்றுலா தளங்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன.

9 மணிக்கு மேல் ஊரடங்கு

பொதுமக்கள் நடமாடும் பகுதிகளான காய்கறி கடைகள், தேநீர் கடைகள், உணவு விடுதிகள், மளிகைக் கடைகள், வணிக வளாகங்கள், ஷோ ரூம்கள், நகை மற்றும் ஜவுளி கடைகள் போன்றவை இரவு 9 மணி வரை மட்டுமே இயங்க அனுமதி தரப்பட்டுள்ளது.

அதாவது மதம் சார்ந்த திருவிழாக்களான , கும்பாபிஷேகம் நடத்த தடை விதித்துள்ளது. புதிதான திருவிழா கூட்டங்களுக்கு முன்கூட்டியே அனுமதி பெற்றிருந்தால், 50 நபர்கள் கலந்து கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

ஞாயிறு முழு ஊரடங்கு

  • மாநிலம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு கொண்டுவர அறிவிக்கப்பட்டுள்ளது.
  • இறைச்சிக் கடைகள், மீன் மார்கெட், காய்கறி கடைகள், தியேட்டர்கள், வணிக வளாகங்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் செயல்பட அனுமதி கிடையாது.
  • அதேசமயம் அத்தியாவசிய பணிகளைத் தொடர்ந்து மேற்கொள்ள எவ்வித தடைகளும் கிடையாது.

யாருக்கு அனுமதி இல்லை

  • முழு ஊரடங்கு நாளில் ஓட்டல்கள் காலை 6-10, பகல் 12 -3, மாலை 6 – 9 வரை பார்சல் வழங்க அனுமதி தரப்பட்டுள்ளது.
  • உணவு விநியோகம் செய்யும் நிறுவனங்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ள நேரங்களில் மட்டும் செயல்பட அனுமதி விதிக்கப்பட்டுள்ளது.
  • ஞாயிற்றுக்கிழமைகளில் மற்ற இ காமர்ஸ் நிறுவனங்களுக்கு அனுமதி கிடையாது.

100 பேருக்கு அனுமதி

முழு ஊரடங்கு அமலில் உள்ள நாட்கள் உள்ளப்பட அனைத்து நாட்களிலும் திருமண நிகழ்வுகளில் 100 பேர், இறப்பு சார்ந்த நிகழ்வுகளில் 50 பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும் என தெறிவிக்கப்பட்டுள்ளது.

அங்கு கொரோனா வழிகாட்டுதல்கள் முறையாகப் பின்பற்றப்படுவது உறுதி செய்ய வேண்டும் என்றும் அரசு தெறிவுறுத்தியுள்ளது.

இன்று காலை முதல் மிழக அரசு கொண்டு வந்துள்ள கட்டுப்பாடுகள் அனைத்தும் அமலுக்கு வந்துள்ளன.

Share This Article
Exit mobile version