- வரும் ஏப்ரல் 9 ஆம் தேதி நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள கர்ணன் திரைப்படம் வெளியாக உள்ளது. இன்று சென்னை பிரசாத் லேப்பில் கர்ணன் படத்திற்கான இசைவெளியிட்டு விழா நடைபெற்று வருகிறது.
- இந்த விழாவில் மாரி செல்வராஜ், ரஜிஷா விஜயன்,சந்தோஷ் நாராயணன், பாடகி தீ, யுகபாரதி, யோகி பாபு, நடராஜன் நட்டி, கௌரி கிஷன் ஆகியோர் கலந்து கொண்டு இருக்கிறார்கள்.
- நடிகை ரஜிஷா விஜயன், கர்ணன் படத்தில் தனக்கு வாய்ப்பளித்த இயக்குனர் மாரி செல்வராஜிற்கு நன்றியை தெரிவித்துள்ளார்.
- இந்த இசைவெளியிட்டு விழாவில் நடிகை ரஜிஷா விஜயன் பேசுகையில் கர்ணன் படம் ஒரு பெரிய ஏமோஷனல் படம். நான் மிக பெரிய தயாரிப்பு குழுவுடன் தாணு சார் நடிப்பின் லெஜெண்ட் தனுஷ் சார், சந்தோஷ் நாராயணன், நடராஜன் நட்டி,யுகபாரதி, யோகி பாபு, கௌரி கிஷன், இவ்வளவு பெரிய ஆர்டிஸ்ட்களுடன் பணியாற்றியது மிகவும் மகிழ்ச்சியை தருகிறது.
- இந்த படத்தில் எனக்கு வாய்ப்பு கொடுத்த மாரி சாருக்கு ஒரு கோடி நன்றி தெரிவித்து கொள்கிறேன்.மேலும் அனைவருக்கும் மிகவும் நன்றி கண்டிப்பாக கர்ணன் திரைப்படத்தை பாருங்கள் என்றும் கூறியுள்ளார்.
Stay Connected
Must Read