இன்று இந்த 5 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் – சென்னை வானிலை மையம்

Selvasanshi 1 View
1 Min Read

தமிழகத்தின் இந்த 5 மாவட்டங்களில் இன்று முதல் 4 நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியதாவது, வெப்பச்சலனம் காரணமாக இன்று (ஆக-26) தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும். தமிழ்நாட்டில் திருப்பத்தூர், திருவண்ணாமலை, திண்டுக்கல், நீலகிரி, ஈரோடு ஆகிய 5 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும், ஆகஸ்ட் 27, 28, 29 ஆம் தேதிகளில் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், திண்டுக்கல், நீலகிரி, சேலம், தேனி, திருப்பூர், கோவை, நாமக்கல், பெரம்பலூர், அரியலூர் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும் பெய்யக்கூடும்.

அடுத்த 48 மணி நேரத்திற்கு சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் மட்டும் லேசான மழை பெய்யக்கூடும். வெப்பநிலை மாற்றம் அதிகபட்சமாக 35 டிகிரி செல்சிஸாகவும், குறைந்தபட்சமாக 25 டிகிரி செல்சிஸாகவும் இருக்கும்.

ஆகஸ்ட் 25 முதல் 29ஆம் தேதி வரை, தென் மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும். அதனால் மீனவர்கள் மீன்பிடிக்க இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share This Article
Exit mobile version