த.மா.கா கட்சி தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது

Pradeepa 1 View
1 Min Read

தமிழ் மாநில காங்கிரஸ்(TMC) கட்சி தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், பூரண மதுவிலக்கு அமல்படுத்துவது போன்ற அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டள்ளது. இந்த 6 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இன்றுடன் வேட்புமனு தாக்கல் முடிவடைய உள்ள நிலையில் தமாகா கட்சி தேர்தல் அறிக்கையை வெளியிடப்பட்டுள்ளது. தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் சென்னையில் உள்ள ஆழ்வார்பேட்டையில் தனது கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.

தேர்தல் அறிக்கைகள்

  • தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படும்.
  • திடக்கழிவு மேலாண்மை பாடத்திட்டம் அனைத்து பள்ளி, கல்லூரிகளில் அறிமுகப்படுத்தப்படும்.
  • மேல்நிலை பள்ளி மாணவர்களுக்கு இருசக்கர வாகன ஓட்டுநர் உரிமம்(licence) பெற்றுத்தரப்படும்.
  • கல்லூரி மாணவர்களுக்கு நான்கு சக்கர வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றுத்தரப்படும்.
Share This Article
Exit mobile version