டீ விற்பனை செய்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட தேமுதிக வேட்பாளர்

Pradeepa 2 Views
1 Min Read

திருவள்ளூர் மாவட்டம் அமமுக-தேமுதிக கூட்டணியில் திருத்தணி தேமுதிக தொகுதியின் வேட்பாளராக கிருஷ்ணமூர்த்தி நிறுத்தப்பட்டுள்ளார்.

திருத்தணி பகுதியில் உள்ள டீக்கடையில் டீ மாஸ்டராக டீ போட்டும், வார சந்தையில் காய்கறிகளை விற்பனை செய்தும் பிரச்சாரம் செய்யும் தேமுதிக வேட்பாளர் கிருஷ்ணமூர்த்தி.

இந்நிலையில், தேமுதிக தொகுதிக்கு உட்பட்ட ஆர்.கே. பேட்டை பகுதியில் செவ்வாய்க் கிழமை வார சந்தை வழக்கமாக நடைபெறும். அப்பகுதியில் வாக்கு சேகரிக்க சென்ற தேமுதிக வேட்பாளர் கிருஷ்ணமூர்த்தி சந்தைக்குச் சென்று தக்காளி வெங்காயம் காய்கறிகளை விற்பனை செய்து முரசு சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

அதற்கு பின் திருத்தணி பகுதியில் உள்ள டீ கடையில், டீ மாஸ்டராக டீ விற்பனை செய்து பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அவருடன், கூட்டணி கட்சியினரும் வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டனர்.

இந்நிலையில், தேமுதிக கட்சியின் தலைவர் விஜயகாந்த் இன்று கும்மிடிப்பூண்டி, திருத்தணி பகுதிகளில் தேமுதிக வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் செய்கிறார்.

Share This Article
Exit mobile version