ஜப்பான் தலைநகரமான டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் முடிந்து மாற்றுத் திறனாளிகளுக்கான பாராலிம்பிக்ஸ் நடைபெற்று வருகிறது
இதில் இந்தியா சார்பில் 54 , வீரர்கள் (40) வீராங்கனைகள் (14) கலந்து கொள்கின்றனர்,
தேசிய விளையாட்டு தினமான இன்று 2 வெள்ளி 1 வெண்கலம் என மூன்று பதக்கங்கள் இந்தியாவிற்கு கிடைத்துள்ளது.
டேபிள் டென்னிஸ் போட்டியில் பாவினாபென் பட்டேல் இறுதிப்போட்டியில் தங்கத்திற்காக போராடி வெள்ளி பதக்கத்தை வென்றார்.
ஆடவர் உயரம் தாண்டுதல் போட்டியில் 2.06 மீ தாண்டி நிஷாந்த் குமார் வெள்ளி பதக்கத்தை வென்றதன் மூலம் அவர் ஆசிய சாதனையையும் படைத்துள்ளார்,அதைப்போல் வட்டு எறிதல் போட்டியில் வினோத் குமார் வெண்கல பதக்கத்தை வென்றுள்ளார்.
தேசிய விளையாட்டு தினமான இன்று இந்தியாவுக்கு 3 பதக்கங்களை அவர்கள் வென்றதன் மூலம் இந்தியா முழுவதும் இவர்களுக்கு பாராட்டு மழை குவிந்து வருகிறது. இதன்மூலம் ரசிகர்களுக்கு மேலும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது