தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் முதலமைச்சர் கொரோனா நிவாரண நிதியாக ரூ.2000 வழங்குவதாக அறிவித்து இருந்தார். இந்த நிவாரண நிதி ரேஷன் கடைகள் மூலம் அளிக்கப்படும் என்று கூறினார். இதற்க்கான பணி அனைத்து ரேஷன் கடைகளிலும் இன்று தொடங்கியது.
சென்னையில் உள்ள சிந்தாதிரி பேட்டையில் கொரோனா நிவாரண நிதியாக 2000 வழங்கும் திட்டத்தை திமுக கட்சியின் எம்.எல்.எ மற்றும் நடிகர் உதயநிதி ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். சிந்தாதிரி பேட்டையில் ஒரே இடத்தில் நான்கு ரேஷன் கடைகள் அமைத்துள்ளது. 4 கடைகளிலும் நிவாரண நிதி வழங்கப்பட்டதால் மக்கள் கூட்டம் அலைமோதியது. மக்கள் சமூக இடைவெளி, முகக்கவசம் அணியாமல் அலட்சியமாக இருந்தனர். ஒரு நாளைக்கு 200 பேருக்கு கொரோனா நிவாரண நிதி வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
திருச்சி மாவட்டத்தில் உள்ள திருவெறும்பூரில் கொரோனா நிவாரண நிதியாக 2000 வழங்கும் திட்டத்தை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார். பின் ஏழை எளிய மக்களுக்கு இலவசமாக உணவு வழங்கினார்.
கோவையில் கொரோனா நிவாரண நிதியாக 2000 வழங்கும் திட்டத்தை உணவு துறை அமைச்சர் சங்கரபாணி தொடங்கி வைத்தார். கோவை மாவட்டத்தில் உள்ள 1401 ரேஷன் கடைகளில் கொரோனா நிவாரண நிதி வழங்கப்பட்டு உள்ளது.
சேலம் மாவட்டத்தில் உள்ள 1591 நியாவிலை கடைகளில் கொரோனா நிவாரண நிதியாக ரூ.2000 வழக்கப்பட்டு வருகிறது.
ஈரோடு, நெல்லை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் இன்று கொரோனா நிவாரண நிதியாக 2000 வழங்கப்பட்டு வருகிறது. மக்கள் கொரோனா தடுப்பு விதிமுறைகளான போதுமான சமூக இடைவெளி, முகக்கவசம் அணிந்து தொகையை பெற்று சென்றனர்.