இந்தியாவில் ஸ்மார்ட்போன் ரியல்மி 8 சீரிஸ் மார்ச் 24 அன்று அறிமுகம்

Selvasanshi 1 View
1 Min Read

இந்தியாவில் ரியல்மி 8 சீரிஸ் ரக ஸ்மார்ட்போனை வரும் மார்ச் 24 ஆம் தேதியன்று ரியல்மி ஸ்மார்ட்போன் நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ளது. ரியல்மியின் தலைமை செயல் அதிகாரி மாதவ் ஷெத் இதனை தெரிவித்துள்ளார்.

இருப்பினும் எந்த மாதிரியான மாடல் ரியல்மி 8 சீரிஸில் வெளியாக உள்ளது என்பது மறைமுகமாகவே உள்ளது.

அதே நேரத்தில், 108 மெகாபிக்சல் கொண்ட கேமரா மார்ச் 24 அன்று வெளியாகவுள்ள போனில் இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

யூடியூபில் இது தொடர்பான வீடியோவை ரியல்மி நிறுவனம் வெளிட்டுயுள்ளது.இந்நிறுவனம் ரியல்மி 8 மற்றும் 8 புரோ என இரண்டு வேரியண்ட்டுகளில் போனை அறிமுகம் செய்ய உள்ளது.

அதில் 8 புரோ போனில் மட்டும் 108 மெகாபிக்சல் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கு முன்னதாக டீஸ் செய்யப்பட்ட 8 மாடல் ஸ்மார்ட் போனில் 64 மெகாபிக்சல் தான் கேமரா என்பதை ரியல்மி உறுதி செய்திருந்தது.

Share This Article
Exit mobile version