விவசாயிகள் பொதுக்கூட்டம் உத்திரபிரதேச மாநிலம் சஹாரன்பூரில் காங்கிரஸ் சார்பில் புதன்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் காங்கிரஸ் காட்சியின் பொது செயலாளர் பிரியங்கா காந்தி வதேரா பங்கேற்றார். புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடி வரும் விவசாயிகளை பிரதமர் மோடியும், பாஜக தலைவர்களும் அவமதித்துள்ளனர் என்று பிரியங்கா கூறினார்.
இந்த போராட்டம் எதற்காக என்று மத்திய அரசுக்கு புரியவில்லை என்றும், அவர்கள் தேச விரோதிகள் என்று மத்திய அரசு கூறுகிறது. ஆனால் உண்மையில் மத்திய அரசு தான் தேச விரோதமாக செய்யப்படுகிறது என்று கூறினார். பிரதமர் மோடிக்கு பாகிஸ்தான் மற்றும் சீனா செல்ல நேரம் இருந்தது. ஆனால் தனது தொகுதியில் போராடிவரும் விவசாயிகளை நேரில் சென்று சந்திக்க அவருக்கு நேரம் இல்லை.
புதிய வேளாண் சட்டங்கள் தீமை விளைவிக்க குடியவைகளாக இருப்பதால் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் அந்த சட்டங்களை ரத்து செய்யப்படும் என்று கூறினார்.
சஹாரன்பூரில் காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற விவசாய பொதுக்கூட்டத்தில் கட்சினர் அளித்த நினைவு பரிசை பிரியங்கா பெற்று கொண்டார்.
காங்கிரஸ் நடத்திய இந்த பொது கூட்டத்தை பாஜக விவசாயிகள் பெயரில் காங்கிரஸ் நாடகம் நடத்துகிறது என்று விமர்சனம் செய்துள்ளது.