- Advertisement -
Homeசெய்திகள்மே 2 ஆம் தேதி தேர்தல் வெற்றியை கொண்டாட தடை - தேர்தல் ஆணையம்

மே 2 ஆம் தேதி தேர்தல் வெற்றியை கொண்டாட தடை – தேர்தல் ஆணையம்

- Advertisement -

ஹைலைட்ஸ் :

  • தேர்தல் ஆணையத்தின் புதிய கட்டுப்பட்டு நிபந்தனைகள்.
  • வாக்கு எண்ணும் மையத்திற்கு வரும் முகவர்கள், அதிகாரிகளுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம்
  • எந்த ஒரு கட்சிகளும் வெற்றிக் கொண்டாட்டத்தை நடத்தக்கூடாது என்றும் இதுபோன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என்றும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

சென்னை(ம) கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதிகள் சமீபத்தில் கொரோனா பரவல் தொடர்பாக தேர்தல் ஆணையத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்.

தேர்தல் ஆணையமானது, கொரோனா வேகமாக பரவி வந்த நிலையில், அரசியல் கட்சிகளின் பேரணிகள், கூட்டங்கள் நடத்துவதற்கு அனுமதித்ததை சுட்டிக்காட்டிய நீதிபதிகள், கொரோனா இரண்டாவது அலை பரவியதற்கு தேர்தல் ஆணையமே காரணம் என்றும் குற்றம் சாட்டினர்.

இதையடுத்து தேர்தல் ஆணையம் வாக்கு எண்ணிக்கையின் போது பின்பற்றவேண்டிய வழிமுறைகள் பற்றி நேற்று ஒரு சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டது.

அந்த அறிக்கையில் வாக்கு எண்ணும் மையத்திற்கு வரும் முகவர்கள், அதிகாரிகளுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் போன்ற பல்வேறு கட்டுப்பாடு நிபந்தனைகள் விதிக்கப்பட்டன.

இந்நிலையில் இன்று தேர்தல் ஆணையம் மற்றொரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டது. அதில் வாக்கு எண்ணிக்கை (மே 2) அன்றோ, அதன் பின்னரோ எந்த ஒரு கட்சிகளும் வெற்றிக் கொண்டாட்டத்தை நடத்தக்கூடாது என்றும் இதுபோன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என்றும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதுபோன்ற கொண்டாட்டத்தின்போது கட்டுப்பாட்டு வழிமுறைகளை பின்பற்றமாட்டார்கள் என்றும் பாதுகாப்பு கோட்பாடுகளை காற்றில் பறக்கவிடுவார்கள் என்று கணித்து தேர்தல் ஆணையம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. தேர்தல் ஆணையம் இந்த விதிமுறை தமிழகம், புதுச்சேரி உள்பட 5 மாநிலங்களுக்கு விதித்துள்ளது.

- Advertisement -
- Advertisement -
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -
Related News
- Advertisement -