சீனா எல்லை பகுதியில் மீண்டும் பதற்றம் – படைகளை குவித்தது இந்தியா

Pradeepa 1 View
2 Min Read

முன் எப்போதும் இல்லாத வகையில் சீன எல்லைப் பகுதியில் இந்தியா கூடுதலாக 50 ஆயிரம் வீரர்களை குவித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சுதந்திரம் பெற்றதில் இருந்தே காஷ்மீர் தொடர்பாக இந்தியா பாகிஸ்தான் இடையே மோதல் நடிப்பதால் மேற்கு எல்லையில் மட்டுமே படைகள் குவிக்கப் பட்டு வந்தன.

இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக லடாக் பகுதியில் இந்திய எல்லை அருகே குடியிருப்பு பகுதிகள் அமைப்பதாக கூறி சீனா படைகளை குவித்தது. தல வடங்களை கொண்டுவர எதுவாக சாலைகளையும் அமைத்தது. உச்ச கட்டமாக கடந்த ஜூன் மாதம் கிழக்கு லடாக்கில் கள்வான் பள்ளத்தாக்கு அருகே இந்தியாவுக்குள் சீன படைகள் ஊடுருவ தொடங்கின. இதனை இந்திய வீரர்கள் தடுத்து நிறுத்திய போது ஏற்பட்ட மோதலில் 20 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.

பதற்றம் அதிகரித்ததை அடுத்து சீன எல்லையில் இந்தியா படைகளை குவிக்க தொடங்கியது. ஏற்கனவே அருணாச்சல பிரதேசத்தை சீனா உரிமை கொண்டாடி வரும் நிலையில் லடாக், சிக்கிம், அருணாசலப் பிரதேசம் என எல்லை முழுவதும் ராணுவ கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளது. இந்நிலையில் கூடுதலாக 50 ஆயிரம் வீரர்களை சீன எல்லைக்கு இந்தியா அனுப்பி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்திய சீன எல்லை நெடுகிலும் 2 லட்சம் வீரர்கள் குவிக்கப்பட்டு இருப்பதாக இராணுவ வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. திபெத் பகுதியில் அதிநவீன ஆயுதங்களை சீனா குவித்து இருப்பதாகக் கூறி அந்த வட்டாரங்கள் இதற்கு பதிலடி தரும் விதமாக பிரான்ஸ் நாட்டின் ரபேல் போர் விமானங்களை அருணாச்சல பிரதேச எல்லையில் இந்தியா நிறுத்தி வைத்திருப்பதாக கூறி உள்ளது.

சீனாவின் சவாலை சமாளிக்கும் விதமாக போர் கப்பல்களும் ரோந்து நடவடிக்கைளை தீவிரப்படுத்தி உள்ளனர். இதனிடையே மூன்று நாள் பயணமாக லடாக் சென்று உள்ள பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் எந்த ஒரு தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க இந்திய ராணுவம் தயாராக உள்ளதாக தெரிவித்தார். அண்டை நாடுகளுடனான பிரச்சினைகளைப் பேசித் தீர்த்துக் கொள்ளவே இந்தியா விரும்புவதாக கூறிய அவர் அதே சமயம் ஒரு அங்குல நிலத்தை கூட இந்தியா விட்டு தராது என்றார்.

இந்நிலையில் 2000 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள இலக்கை குறிவைத்து தாக்கும் ஆற்றல் படைத்த அக்கினி ப்ரிம் ஏவுகணை ஒடிசா கடற்கரையில் இன்று வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் ஆற்றல் படைத்த இந்த ஏவுகணை இலக்கை சரியாக தாக்கியதாக ராணுவ ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

Share This Article
Exit mobile version