இந்தியாவில் பணக்கார கோவில் என்று அழைக்கப்படும் திருப்பதி கோவிலை போன்று தெலுங்கானாவில் பிரமாண்டமாக கோவில் ஒன்று கட்டப்பட்டு வருகிறது. இந்த கோவிலின் கட்டுமான பணி இறுதி கட்டத்தில் உள்ளது.
ஆந்திராவில் இருந்து தெலுங்கானாவை தனி மாநிலமாக பிரிக்க தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சியின் தலைவர் சந்திரசேகர் ராவ் கடும் போராட்டங்களை நடத்தினர். தெலுங்கானா தனி மாநிலமாக பிரிந்தால் திருப்பதி கோவிலுக்கு இணையாக யாதகிரிகுண்டாவில் உள்ள பகவான் லட்சுமி நரசிம்ம குகைக்கோவிலை மாற்றுவேன் என்று உறுதியளித்தார்.
கடந்த 2014 ஆம் ஆண்டு ஆந்திர மாநிலம் இரண்டாக பிரித்து தெலுங்கானா தனியாக மாறியது. கடந்த 2016 ஆம் ஆண்டு சந்திரசேகர் ராவ் அளித்த வாக்குறுதியின் படி யாதத்ரி கோவில் மேம்பாட்டு ஆணையத்தை உருவக்கினார். இந்த கோவில் கட்டுவதற்கு 1800 கோடி ஒதுக்கப்பட்டது.
ஐதராபாத்தில் இருந்து 70 கி.மி தொலைவில் யாதகிரிகுண்டாவின் பசுமை நிறைந்த மலையின் மேல் பகவான் லட்சுமி நரசிம்ம குகைக்கோயில் அமைந்துள்ளது. இந்த குகையில் குண்டுகள், 8 மலைகள் பசுமை நிறைந்த காடுகள் காணப்படும். சுமார் 1000 வருடங்கள் பழமை வாய்த்த இந்த கோவில் 2500 சதுர அடி மட்டுமே இருந்தது.
தற்போது இந்த கோவில் 1400 ஏக்கர் பரப்பளவில் மறு கட்டுமானம் செய்யப்பட்டு பிரமாண்டமாக காணப்படுகிறது. இந்த கோவில் பழங்கால அகம சாஸ்திர விதியின்படி கட்டப்பட்டு வருகிறது. கோவில் கட்டுமான பணிக்காக செங்கல், சிமெண்ட் , கான்க்ரீட் போன்றவை எதுவும் பயன்படுத்தவில்லை. கிருஷ்ணசிலா எனப்படும் கருப்பு கிரானைட்டுகளை மட்டுமே கட்டுமானத்திற்காக பயன்படுத்தப்படுகிறது. இதனால் இந்த கோவில் சுமார் 1000 வருடங்களுக்கு எந்தவித சீற்றத்திற்கும் ஆளாகாமல் கம்பிரமாக நிலைத்து நிற்கும்.
தெலுங்கானா மூத்தவரின் கனவு திட்டமான யதாத்ரிகுட்டா கோவில் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. புஷிகர்னி எனப்படும் பத்தர்கள் நீராடும் குளம், கல்யாண கட்டா எனப்படும் முடி காணிக்கை செலுத்தும் இடம், பிரசாதம் தயாரிக்கும் இடம் ஆகிய பணிகள் இன்னும் நிறைவடையாமல் உள்ளது. இந்த மாத இறுதியில் கோவில் கட்டுமான பணி முடிவடைந்து விடும்
மே மாத தொடக்கத்தில் பகவான் லட்சுமி நரசிம்ம கோவிலின் திறப்பு விழா கோலாகலமாக நடைபெறும் என்று கோவில் மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆந்திராவில் இருந்து தெலுங்கானா தனியாக பிரிந்ததால் திருப்பதி கோவில் ஆந்திரவிற்கு சொந்தமானது. இதனால் மக்கள் வருத்தமடைந்து இருந்தனர் அவர்களுக்கு இந்த கோவில் ஆறுதலாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.