தமிழக அரசு தலைமைச்செயலாளர் ராஜீவ் ரஞ்சன், மத்திய விமான போக்குவரத்துத் துறை செயலாளருக்கு எழுதிய கடிதத்தில் உள்ளூர் மட்டும் வெளியூர் செல்லும் விமானங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
சென்னை விமான நிலையத்துக்கு வரும் உள்ளூர் விமானங்களின் எண்ணிக்கை 50-ல் இருந்து 144 ஆக அதிகரிக்க வேண்டும் என்று சென்னை விமான நிலைய இயக்குனர் கடிதம் எழுதி உள்ளார்.
அதைத் தொடர்ந்து, சென்னை விமான நிலையத்துக்கு வரும் விமானங்களின் எண்ணிக்கை 100 ஆக அதிகரிக்கப்பட்டது. இந்த நிலையில் அந்த எண்ணிக்கையை 100-ல் இருந்து 150 ஆக உயர்த்த வேண்டும் என்று சென்னை விமான நிலைய இயக்குனர் கடிதம் எழுதி உள்ளார்.
இந்நிலையில் நீங்கள் (மத்திய அரசின் விமான போக்குவரத்துத் துறை செயலாளர்) தமிழக அரசுக்கு எழுதிய கடிதத்தில், கொரோனா பரவல் காரணமாக உள்ளூர் மட்டும் வெளியூர்களுக்கு இடையேயும் வந்து செல்லும் விமானங்களின் எண்ணிக்கைக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை நீக்க வேண்டும்’ என்று கூறப்பட்டிருந்தது.
கொரோனா பரவல் குறைந்து வரும் நிலையில் கட்டுப்பாடுகளை தளர்க்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அந்தக் கடிதத்தின் அடிப்படையில், தற்போது தமிழ்நாட்டுக்கு உள்ளேயும், மாநிலங்களுக்கு இடையேயும் சென்றுவரும் விமானங்களின் எண்ணிக்கையில் கூறப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை நீக்குவதற்கு தமிழக அரசு முடிவு செய்துள்ளது.