கொரோனா தொற்றால் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வை ஒத்திவைக்க தேர்வுத்துறை ஆலோசனை

Pradeepa 2 Views
2 Min Read

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த ஆண்டு மார்ச் 24 ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. கொரோனா தொற்றால் மாணவர்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக பள்ளி, கல்லுரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. மாணவர்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்த அரசு உத்தரவிட்டது.

இந்த ஆண்டு கொரோனா பரவல் குறைத்து வந்ததால் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தகர்க்கப்பட்டது. இந்நிலையில் தமிழக அரசு பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடக்க திட்டமிட்டுள்ளது. ஜனவரி 19ஆம் தேதி 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டது. இதனை தொடர்ந்து பிப்ரவரி 8ஆம் தேதி 9 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டது.

சரியான கொரோனா விதிமுறைகளை பின்பற்றாததால் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. சம்மந்தப்பட்ட பள்ளிகள் மூடப்பட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 9 முதல் 11 ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்வுகள் ஏதும் இன்றி தேர்ச்சி பெற்றுள்ளதாக தமிழக முதல்வர் அறிவித்தார்.

12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே 3ஆம் தேதி முதல் 21 ஆம் தேதி வரை பொதுத்தேர்வு நடத்தும் வகையில் அட்டவணை வெளியிடப்பட்டது. தேர்வுக்காக மாணவர்கள் தீவிரமாக தயாராகி வருகின்றனர்.

கடந்த ஒரு மாதத்தில் கொரோனா வைரஸ் பரவல் ஆங்கரித்துள்ளது. இதனால் 9 ஆம் வகுப்பு முதல் 11 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டன. தமிழகத்தில் உள்ள கலை அறிவியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், மருத்துவக் கல்லூரிகள், கால்நடை கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மீண்டும் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது.

நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வை அட்டவணைப்படி நடத்த முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வை மே மாத இறுதியில் அல்லது ஜூன் மாதத்தில் நடத்தலாமா என்று தேர்வுத்துறை ஆலோசனை செய்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்கிடையில் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு விடும் என்று அரசு கூறியுள்ளது.

பொதுத்தேர்வு ஒத்திவைப்பது குறித்து அரசு தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் வெளிவரவில்லை. 12ஆம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்விற்கு தயாராகுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Share This Article
Exit mobile version