தமிழகத்தில் காற்றை போல பரவி வரும் கொரோனா வைரஸ் காரணத்தால் அனைத்து மக்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். வைரஸை கட்டப்படுத்தும் நோக்கில் திங்கட்கிழமை முதல் மே 24 ஆம் தேதி வரை பல கட்டுப்பாடுகளை தமிழக அரசு கொண்டுவந்தது. இந்நிலையில் பல்வேறு தளவர்களுடன் கூடிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்களின் உத்தரவின்படி இந்த ஊரடகானது அமலில் இருந்து வருகிறது.
இந்நிலையில் காய்கறி கடைகள், பூ கடைகள் மற்றும் மளிகை கடைகள் உள்ளிட்டவை விற்பனை செய்ய அனுமதி அளிக்கப்பட்டதை போன்று, அதே நிபந்தனைகளுடன் பழக்கடை வியாபாரமும் செயல்படலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மெடிக்கல் கடைகள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டது போன்று, அதே நிபந்தனைகளுடன் நாட்டு மருந்துக் கடைகளும் செயல்பட அனுமதி வழக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசானது ஊரடங்கு காலத்தில் அனைத்துத் தொழில் நிறுவனங்களிலும் தொழிற்சாலைகளில் உள்ள பணிகளை பராமரிக்க குறைந்த அளவிலான பணியாளர்களுடன் ஒரு நாள் மட்டும் அனுமதி வழங்கப்படுகிறது என்று தளர்வுகள் குறித்த விவரங்களை அறிவித்துள்ளது.
தனியார் மற்றும் ஐடி நிறுவனங்களுக்கு விடுத்துள்ள பாதுகாப்பு கட்டுப்பாடுகள் தொடர்ந்து அமலில் இருக்கும் என்று தெரிகிறது. அதேபோன்று மதியம் 12 மணிக்கு மேல் அனுமதிக்கப்பட்ட கடைகள் செயல்படவும் தடைகள் நீளும் எனத் தெரிகிறது.