6 முதல் 10 ஆம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவர்களுக்கு கணிப்பொறி அறிவியல் பாடம் கட்டாயம் என இடைக்கால பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடைக்கால பட்ஜெட்டில் மாணவர்களுக்கு இது ஒரு அசத்தலான அறிவிப்பாக கருதப்படுகிறது.
துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் 6 முதல் 10 ஆம் வகுப்பு வரை கணிப்பொறி அறிவியல் பாடம் அறிமுகப்படுத்தப்படும் என்று கூறினார்.
இன்று துணை முதலமைச்சரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட் தாக்கலை அறிவித்து வருகிறார்
துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட் அறிவிப்பில் இன்று, 2021-22 ஆம் நிதியாண்டில் உயர்கல்வித் துறைக்காக ரூ.5,478.19 கோடி ஒதுக்கீடு செய்துள்ளதாகக் கூறினார்.
மேலும் அனைத்து அரசு பள்ளிகளிலும் 6 முதல் 10-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு கணிப்பொறி அறிவியல் பாடம் அறிமுகப்படுத்தப்படும் என்றும் கூறினார்.
மேலும் மதிய உணவுத் திட்டத்திற்காக 1,953 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த ஆண்டு 11 புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைக்க 2,470 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளதாகவும் கூறினார்.இதன் மூலம் கூடுதலாக 1650 மருத்துவ மாணவ சேர்க்கை அதிகரிக்கும்