- Advertisement -
Homeசெய்திகள்தமிழ்நாடு மின்சார வாரிய வேலை வாய்ப்பு - 59,900 வரை சம்பளம்

தமிழ்நாடு மின்சார வாரிய வேலை வாய்ப்பு – 59,900 வரை சம்பளம்

- Advertisement -spot_img

தமிழக மின்வாரியத்தில் வேலைசெய்யா வாய்ப்பு உருவாகி உள்ளது. காலியாக உள்ள 2900 கள உதவியாளா் (பயிற்சி) பணியிடங்களுக்கு, நேற்று  (பிப்ரவரி 15-ஆம் தேதி) முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த  ஆண்டு  மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் 2900 கள உதவியாளா் (பயிற்சி) பணியிடங்களுக்கு நேரடி நியமனம் மூலம் நிரப்பிடும் என்று செய்தி  வெளியிடப்பட்டது. ஆனால் மார்ச் மாதம் வந்த கொரோனா பரவல் காரணத்தால் தேதி குறிப்பிடாமல் வேலைக்கு விண்ணப்பிக்கும் முறைகள் ஒத்திவைக்கப்பட்டது. கொரோனா லாக்டவுனுக்கு பிறகு தற்போது கள உதவியாளா் (பயிற்சி) பணி நேரடி நியமனத்துக்கான விண்ணப்பங்கள், ஆன்லைன் மூலம் பிப்ரவரி 15 முதல் மார்ச் 16-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கள உதவியாளா் (பயிற்சி) (Field Assistant (Trainee)) பணியிடங்கள்

தகுதி:

எலக்ட்ரீஷியன், வயர்மேன், எலக்ட்ரிக்கல் போன்ற பிரிவில் விண்ணப்பிக்க ஐடிஐ(ITI) முடித்திருக்க வேண்டும். மேலும் தொழில் பழகுநர் பயிற்சி முடித்து சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பத்தாரர்கள் தமிழ் மொழி போதுமான அறிவை பெற்று இருக்க வேண்டும்.

ஊதியம்:

மாதம் ரூ. 18,800 – 59,900 வரை

வயதுவரம்பு:

SC , STA , ST மற்றும் ஆதரவற்ற விதவைகள் பிரிவினர் 18 முதல் 35க்குள்ளும், MBC  பிரிவினர் 18 முதல் 32க்குள்ளும், ஏனைய பிரிவைச் சேராத இதர பிரிவினர் 18 முதல் 30க்குள்ளும் இருத்தல் வேண்டும். உடல் தகுதித்தேர்வு மற்றும் எழுத்துத் தேர்வு மூலம் தகுதி பெற்றவர்கள்  தேர்வு செய்யபடும் .

தேர்வுக் கட்டணம்:

BC , MBC பிரிவினர் ரூ.1000, ஆதிதிராவிடர், பழங்குடி பிரிவினர் ரூ.500, அனைத்து பிரிவினைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஆதரவற்ற விதவைகள் பிரிவினர் ரூ.500 கட்டணமாக செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைன் மற்றும் வங்கிகள் சேவைகளை பயன்படுத்தி செலுத்த வேண்டும்.

 விண்ணப்பிக்கும் முறை:

www.tangedco.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணைதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
உடல் தகுதி தேர்வு மற்றும் எழுத்து தேர்வு www.tangedco.gov.in என்ற இணையதளததில் வெளியீடப்படும் பிப்ரவரி 15 முதல் மார்ச் 16-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img