தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினின் தனிப்பிரிவு இணையதளம் தொடக்கம்!

Selvasanshi 1 View
1 Min Read

தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக தனிபெருமான்மையுடன் வெற்றிப்பெற்று ஆட்சியமைத்தது. இதனைத் தொடர்ந்து திமுக தலைவர், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தேர்தல் பிரசாரத்தின் போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறார். அந்த வகையில், பொதுமக்கள் தங்கள் புகார்களை நேரடியாக தமிழக முதல்வரிடம் அளிக்க, தமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையதளம் தற்போது தொடங்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, பொதுமக்கள் தங்கள் புகார்களை https://cmcell.tn.gov.in/register.php என்ற இணைய முகவரியில் தெரிவிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இணையதளத்திலே பொதுமக்கள் அளித்த புகார் சம்பந்தமாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பற்றியும் தெரிந்து கொள்ளலாம். இதற்கான வசதியும் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களிடமிருந்து நேரடியாக புகார்களை பெறும் வகையில், ‘உங்கள் தொகுதியில் முதல்வர்’என்ற தனிப்பிரிவு உருவாக்கப்படும் என்று திமுக தேர்தல் பிரசாரத்தின் போது அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், இந்த இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது.

Share This Article
Exit mobile version