ஒலிம்பிக் தொடரை நெருங்கிக் கொண்டிருக்கும் இந்த தருணத்தில் ஒலிம்பிக் தொடர்பான முக்கிய நிகழ்வுகளை பற்றி பார்ப்போம். அந்த வகையில் இந்தியாவின் மிகப்பெரிய நம்பிக்கையாக உள்ள தமிழக வீராங்கனை இளவேனில் வாலறிவன் பற்றி பார்ப்போம்.
ஒலிம்பிக் போட்டியில் இந்திய ஹாக்கி அணிக்கு அடுத்தபடியாக தங்கம் வென்ற போட்டின்னு பார்த்தா துப்பாக்கி சுடுதல் போட்டி. 2008 ஆம் ஆண்டு நடத்தைப்பெற்ற பீஜிங் ஒலிம்பிக் தொடரில் அபினோ பிந்த்ட்ரா தங்கப்பதக்கம் வென்றார். இந்த தடவை ஒலிம்பிக் போட்டியில் இந்தியா உடைய மிக பெரிய பலம் துப்பாக்கி சுடுதல் அணி.
துப்பாக்கி சுடுதலில் மட்டும் மொத்தம் 15 பேர் இந்தியா சார்பாக ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க உள்ளனர். அதில் இளவேனில் வாலறிவன், திவ்யான்ஸ் சிங் ஆகியோர் மீது அதிக எதிர்பார்ப்பு உள்ளது. அதிலும் குறிப்பாக தமிழ்மங்கை இளவேனில் வாலறிவன் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் உலகிலேயே முதல் இடத்தில் இருப்பதால் மறுபடியும் இந்தியாவுக்கு துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்கப் பதக்கம் கிடைக்கும் என்ற நம்பிக்கை எழுந்துள்ளது.
தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டத்தில் ஆகஸ்ட் 2 ஆம் தேதி 1999 ஆம் ஆண்டு பிறந்தவர் இளவேனில் வாலறிவன். முனைவர் பட்டம் பெற்ற இவரது பெற்றோர் வேலைகாக குஜராத் சென்றனர். இரண்டு வயதில் இருந்து குஜராத்தில் வளர்ந்தார். அவருக்கு படிப்பில் விருப்பம் இல்லாததால் உனக்கு என்ன விருப்பமோ அதில் கவனம் செலுத்து என்று கூறிய அவருடைய பெற்றோர் அவருக்கு உறுதுணையாக இருந்ததால் தங்கத்தை வேட்டையாட தயாராக இருக்கிறார் இளவேனில் வாலறிவன்.
குறிப்பாக தாய்மார்கள் தினத்தன்று தன்னுடைய தாய் சரோஜாவை பெருமைப்படுத்த விரும்பிய இளவேனில் ஒலிம்பிக் கமிட்டி வளைத்தளத்தில் கட்டுரை எழுதி வெளியிட்டுள்ளார். அதில் தன்னுடைய வெற்றியில் அவருடைய தாயார் பங்கை சுட்டிக்காட்டி உள்ளார். இளவேனில் வாலறிவன் தாயார் ஒரு காலேஜ் ப்ரின்சிபிள். 10 வருடங்களாக பயிற்சிக்காக தினமும் 20 கிலோ மீட்டர் தூரம் கூட்டிட்டு போய் பயிற்சி முடிந்த பிறகு தன்னுடைய வேலைக்காக 150 கிலோ மீட்டர் தூரம் பயணம் பண்ணிட்டு இருந்து இருக்காங்க சரோஜா.
2018 ஆம் ஆண்டு சிர்நீல நடந்த ஜூனியர் உலக கோப்பையில் தங்க பதக்கம் வென்று தாயகம் திரும்பினர். தங்க பதக்கத்தை தன்னுடைய பெற்றோருக்கு சமர்ப்பித்து பெருமைப்படுத்தினர் இளவேனில். 2019 ஆம் ஆண்டு ஜெர்மனியில் நடைபெற்ற ஜூனியர் உலகக் கோப்பையில் தங்கம் வென்றார். அதே ஆண்டு பிரேசிலில் நடைபெற்ற சீனியர் உலக கோப்பையில் தங்கம் வென்றார். இப்படி உலக அளவிலான போட்டிகளில் மட்டும் மூன்று தங்கப் பதக்கம் வாங்கிய இளவேனில் இந்த தொடர் வெற்றிகளால் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் உலகத்திலேயே முதல் இடம் பிடித்துள்ளார். இதனால் உலக நாடுகளை உற்றுநோக்கும் அளவுக்கு உயர்ந்துள்ளார். மற்ற நாட்டு போட்டியாளர்களுக்கு சிம்மசொப்பனமாக மாறிய தமிழ் மங்கை இளவேனில் வாலறிவன்.