டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடக்கம் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அறிவிப்பு!

Selvasanshi 1 View
2 Min Read

ஹைலைட்ஸ்:

  • தமிழ்நாடு அரசின் அனுமதியை பெற்றது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம்.
  • டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடர் ஆரம்பம்.
  • 2021 டி.என்.பி.எல். ஆம் தொடருக்கான போட்டியின் அட்டவணையை கிரிக்கெட் சங்கம் வெளியீடு.

தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரானது ஐந்தாவது சீசனாக ஜூன் 4-ம் தேதி முதல் ஜூலை 4 வரை சேலம், திருநெல்வேலி, திண்டுக்கல், கோவை என நான்கு நகரங்களில் நடைபெற இருக்கிறது.

டி.என்.பி.எல்.போட்டியானது தமிழகத்தில் சேலம், சென்னை, கோவை, மதுரை, திருச்சி, நெல்லை, திண்டுக்கல், திருப்பூர் ஆகிய எட்டு நகரங்களை மையமாக கொண்ட அணிகள் பங்கேற்கும் 20 ஓவர் கிரிக்கெட் தொடர் 2016 ம் துவங்கப்பட்டது.

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் டி.என்.பி.எல். போட்டியை இதுவரை நான்கு ஆண்டுகள் வெற்றிகரமாக நடத்தப்பட்டநிலையில் கடந்த ஆண்டு கொரோனோ பரவல் காரணமாக ஐந்தாவது சீசன் தடை செய்யப்பட்டது. இந்நிலையில் 2021 ஆம் தொடருக்கான போட்டியின் அட்டவணையை கிரிக்கெட் சங்கம் வெளியிட்டுள்ளது.

தமிழ்நாடு அரசின் அனுமதியை பெற்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் இந்த ஆண்டிற்கான டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரின் போட்டி அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனோ பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் இந்த போட்டி நடைபெறும் என தெறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி ஜூன் 4 ம் தேதி திருநெல்வேலியில் முதல் கட்ட போட்டி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. திருநெல்வேலி, திண்டுக்கல், சேலம், கோவை போன்ற நகரங்களில் உள்ள மைதானங்களில் போட்டிகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முதல் முறையாக டி.என்.பி.எல் போட்டிகள் சேலம், கோவை மைதாங்களில் நடப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த போட்டியானது நான்கு மைதாங்களில் மொத்தம் 32 போட்டிகள் கொண்ட தொடர் லீக்காக நடத்தப்படவுள்ளன. கோவை மற்றும் சேலத்தில் இறுதிப்போட்டிக்கான தகுதி சுற்று ஆட்டம் நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து சேலம் மைதானத்தில் இறுதிப்போட்டி நடைபெற இருக்கிறது. ஐ.பி.எல் போட்டி முடிந்தவுடன் தமிழக வீரர்கள் டி.என்.பி.எல். போட்டிக்கு தயாராகவுள்ளனர்.

அனைத்து வீரர்களும் பாதுகாப்பு கோட்பாடுகளுக்கு கொண்டுவரப்பட்டு பிசிசிஐ விதிமுறைப்படி வீரர்கள் கொரோனோ பரிசோதனை செய்யப்பட்டு தீவிர பாதுகாப்பிற்கு உட்படுத்தப்படவுள்ளனர்.

தமிழகத்தில் கொரோனோ பரவல் அதிகரித்து வரும் சூழ்நிலையில் பார்வையாளர்கள் இன்றி இந்த போட்டியை நடத்த முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Share This Article
Exit mobile version