- தமிழக சட்டமன்றத்தேர்தல் திட்டமிட்டப்படி வரும் ஏப்ரல் 6 -ஆம் தேதி நடைபெறும். மேலும் கொரோனா பாதித்தவர்கள் கடைசி ஒரு மணி நேரம் வாக்களிக்க அனுமதிக்க படுவார்கள் என்றும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரதா சாகு கூறியுள்ளார்.
- இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரதா சாகு கூறியதாவது: ” தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக 7,255 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. இதில் 4, 512 வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டுயுள்ளது. மீதமுள்ள 2,743 வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டு உள்ளது.
- தமிழகத்தில் மொத்தமாக 6,29,43,512 வாக்களர்கள் உள்ளார்கள். இதில் 3.09 கோடி ஆண் வாக்களர்களும், 3.19 கோடி பெண் வாக்காளர்களும் மற்றும் 7,192 திருநங்கைகளும் உள்ளார்கள். இதுவரை 83.99 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
- மேலும் 1.70 கோடி மதிப்பிலான மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து 0.57 கோடி மதிப்பிலான போதைப் பொருள்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக 231.63 கோடி மதிப்பிலான பணம் மற்றும் போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
- தேர்தல் தொடர்பாக பண விநியோகம் மற்றும் விதிமுறை மீறல்கள் ஏதேனும் நடந்தால் சிவிஜில் செயலி மூலம் புகைப்படம் அல்லது வீடியோ எடுத்து ஆதாரத்துடன் புகார் செய்ய முடியும். இதுவரை இந்த செயலி மூலம் 1,971 புகார்கள் வந்து ள்ளது. அதில் 1,368 புகார்கள் உண்மைத்தன்மை வாய்ந்தது என்பதை கண்டறியப்பட்டுயுள்ளது.
- அதன் மீது நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது. பரப்புரை வாகனங்கள் தொடர்பாக 6,598 விண்ணப்பங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுயுள்ளது. மேலும் தமிழகத்தில் 515 காவல் சோதனை சாவடிகளும் அமைக்கப்பட்டுள்ளது .
- சென்னை,கரூர், கோவை, நாமக்கல் ஆகிய மாவட்டங்களிலிருந்து தேர்தல் விதிமுறைகள் தொடர்பாக அதிக புகார்கள் வந்துள்ளது. தமிழக சட்டமன்றத்தேர்தல் காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
- வாக்குப்பதிவின் போது கொரோனா பாதித்தவர்களுக்கு கடைசி ஒரு மணி நேரம் வாக்களிக்க அனுமதி வழங்கப்படும்’ என்று அவர் தெரிவித்தார்.