தமிழ் மாதங்கள்

sowmiya p 6 Views
2 Min Read

தமிழ் மாதங்கள் 12 என்று அனைவரும் அறிவோம். ஆனால் ஆங்கில மாதம் பிப்ரவரியில் 4 ஆண்டுகட்கு ஒருமுறை லீப் ஆண்டில், ஒரு நாளைச் சேர்ப்பார்கள். ஆனால் நானுறு ஆண்டிற்கு ஒருமுறை வரும் லீப் ஆண்டில், பிப்ரவரிக்கு நாளைச் சேர்க்க மாட்டார்கள்! ஆனால் நம் தமிழ் மாதங்களில் அப்படியெல்லாம் இல்லை. ஏன்?

ஏனென்றால் தமிழ் முன்னோர்கள் ஆங்கிலேயர்களை விட மிகப் பெரிய அறிவாளிகள். அரைகுறை அறிவோடு உருவாக்கப்பட்டது ஆங்கிலேய நாட்காட்டி. தமிழ் முன்னோர்கள் மிகத் துல்லியமாக பூமி சூரியனைச் சுற்றும் கால அளவைக் கணித்தனர். அதாவது 365 நாட்கள் 15 நாழிகை 31 விநாடி 15 தற்பரை!!!!!! ஒரு நாழிகை என்பது 24 நிமிடங்கள் (Minutes), ஒரு விநாடி என்பது 24 நொடிகள் (Seconds) மற்றும் ஒரு தற்பரை என்பது 0.4 நொடி! அத்துணை நுட்பம்!!! அதாவது 365 நாட்கள்
6 மணி நேரம் 12 நிமிடம் 30 நொடிகள் (365 Days 6 Hours 12 Minutes and 30 Seconds)!

இப்போது அதனை 12 சம பகுதிகளாப் பிரித்தனர். அவைகள் தான் 12 இராசிகள் (மேழம், ரிசபம்..) இன்றும் கேராளவில் மாதப் பெயர்கள் மேஷம், ரிஷபம் என்று தான் உள்ளது. தமிழகத்தில் அந்த இராசியில் முழுநிலவு வரும் நாளின் விண்மீனை, அந்த மாதத்தின் பெயராக அழைக்கின்றனர் (சித்திரை, வைகாசி..).

பூமி தன்னைத் தானே சுற்றுவதால் ஒரு நாள் பிறக்கிறது. ஆனால் பூமி சுரியனைச் சுற்றுவதால் ஓர் ஆண்டு பிறக்கிறது. இவைகள் இரண்டும் ஒன்றுக்கொன்று உறவில்லாத நிலையில் இருக்கக் கண்டனர். அதாவது 365 நாள் முடிந்தால் ஓர் ஆண்டு நிறைவுராது. அதற்குப் பிறகு 15 நாழிகை 31 விநாடி 15 தற்பரை தாண்ட வேண்டும்! அப்போது தான் ஒரு முழுச் சுற்று நிறைவு பெறும்.

ஆகவே நம் முன்னோர்கள் ஒரு நாள் என்பதின் தொடக்கத்தினை சூரியன் உதிக்கும் நொடி முதலாகவும், நாளின் இறுதியினை, அடுத்த நாள் சூரியன் உதிக்கும் நொடியாகவும் அமைத்தனர். மேலும் பூமி சூரியனைச் சுற்றும் நீள்வட்டத்தை 12 சம பகுதிகளாப் பிரித்து, இராசிக் கட்ட பெயர்களைக் கொடுத்தார்கள் அல்லவா? எப்பொழுது சூரிய உதயம் ஒரு இராசிக் கட்டத்திலிருந்து அடுத்த இராசிக் கட்டத்திற்கு மாறுகிறதோ, அதனை மாதப் பிறப்பாகக் கொண்டனர்! இந்த மாதப் பிறப்பு, சில முறை காலை 10:00 மணிக்கு நடக்கும், அல்லது இரவு 11:20க்கு நடக்கும்!

இப்படி சூரியன் அடுத்த இராசிக்கட்டத்தில் நுழையும் நிகழ்வு, சூரியன் இருக்கும் போழ்து பகலில் நடந்தால், அந்த நாளை புது மாதப்பிறப்பாகவும், சூரியன் மறைந்த பின் இரவில் நடந்தால், அடுத்த நாளை புது மாதப் பிறப்பாகவும் கொண்டனர்!!!!

இதனால் நமக்கு லீப் ஆண்டு தேவையில்லை!!! சோதிட பஞ்சாங்கத்தில் இப்படி இன்னும் பல மிக நுண்மையான நுட்பங்களைச் செதுக்கியுள்ளனர்! வாழ்க தமிழ் முன்னோர்கள்!!!

Share This Article
Exit mobile version