தமிழ் அம்மா கவிதைகள்

Vijaykumar 30 Views
1 Min Read

அம்மா

  • முதலில் நான் பேசி பழகியதும்
    உன் பெயர் தான்…!
    முதலில் நான் எழுதி பழகியதும்
    உன் பெயர் தான்…!
    …::அம்மா::…

பொக்கிஷம்

  • அருகில் இருக்கும் போதே அள்ளிக்கொள்.
    தொலைந்து போன பின் தேடாதே.
    அது மீண்டும் கிடைக்காத பொக்கிஷம்.
    அன்னையின் அன்பு…!

உறவுகள்

  • பேசியும் புரியாத உறவுகளுக்கு மத்தியில்
    பேசாமல் புரிந்து கொள்ளும் உறவு ‘அம்மா’.
    கேட்டும் கொடுக்காத தெய்வங்களுக்கு மத்தியில்
    கேட்காமல் கொடுக்கும் தெய்வம் ‘அம்மா’.

அன்புக்கு இணை ஏதும் இல்லை

  • தன் உடல் மூலம் உடல் தந்து,
    உதிரத்தை உணவாக தந்து,
    உயிருக்கு உணர்வுகளையும்
    தந்தவள் தாய்…!
    உன் போல் யாரும் இல்லை.
    உன் அன்புக்கு இணை ஏதும் இல்லை.

தாய்க்கு மகிழ்ச்சி

  • கேட்டதை வாங்கிக் கொடுத்துவிட்டால்
    மனைவிக்கு மகிழ்ச்சி…!
    என்ன வேண்டும் என்று கேட்டாலே
    போதும் தாய்க்கு மகிழ்ச்சி…!

அகிலமே போற்றும்

  • அள்ள அள்ள குறையாதது எது..?
    அமுதசுரபியா..?
    இல்லை, அகிலமே போற்றும்
    “அம்மாவின் அன்பு”.

அன்பு என்றாலே

  • ஆயிரம் முறை காயப்படுத்தினாலும்
    திரும்பி ஒரு முறை கூட
    காயப்படுத்தாத உறவு அம்மா…!
    அன்பு என்றாலே அம்மா தான்…!

ஒரே கடவுள்

  • செய்த குற்றங்கள் அனைத்தையும்
    மன்னிக்கும் ஒரே கடவுள்.
    அம்மா…!

மூன்றெழுத்தே

  • அம்மாவுக்கு என்று
    தனியாக கவிதை வேண்டாம்.
    அம்மா என்ற மூன்றெழுத்தே கவிதை தான்.
    அன்பாக பழகிப்பார் அம்மாவும் கவிதை தான்.!

தமிழ் தாய்

  • கவிதை எழுதுவது
    பெண்ணுக்காக அல்ல.
    என் தமிழுக்காக,
    என் தமிழ் தாய்க்காக
    ”தமிழ் தாய்”
    அவளும் பெண் தானே…!
Share This Article
Exit mobile version