கடலுக்கு மாற்று பெயர் என்ன
1)அடங்காவாரிதி அடங்காத + வாரிதி = எப்போதும் அடங்காமல் ஆர்ப்பரிக்கும் தென் கடல். 2)அத்தி உயிர் ( விதை) நிறைந்த அத்திப்பழம் போன்ற கடல். அத்திக்கு வித்தனையும் (அஷ்டப். திருவேங்கடத்தந்தாதி -33). 3)அபாம்பதி அபாகம் + பதி =பகுக்க முடியா கடவுள் சிந்தாமணி நிகண்டில் அபாம்பதி என்ற சொல் காணப்படும் செய்யுள் எண் 185 கடல் என பொருள்படும். 4)அம்பரம் அம் + பரம் = நீர் கடவுள் எரிகணை யேவ வம்பரமுற்றது. (பாரத. பதினான். 93) […]