Adblocker detected! Please consider reading this notice.

We've detected that you are using AdBlock Plus or some other adblocking software which is preventing the page from fully loading.

We don't have any banner, Flash, animation, obnoxious sound, or popup ad. We do not implement these annoying types of ads!

We need money to operate the site, and almost all of it comes from our online advertising.

Please add tamilguru.in to your ad blocking whitelist or disable your adblocking software.

×

இன்றும் நாளையும் மெட்ரோ ரயில் சேவையில் 50% கட்டண சலுகை

சென்னை மெட்ரோ ரயில் சேவையில் இன்றும் நாளையும் 50 சதவீத கட்டண சலுகை வழங்கப்படுவதாக அரசு அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு பொது விடுமுறை நாட்கள் மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் மெட்ரோ ரயில் சேவையில் 50 சதவீத கட்டண சலுகை வழங்கப்பட்டு வருகிறது. இன்று தெலுங்கு மற்றும் கன்னட மக்களின் புத்தாண்டு தினம் உகாதி பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. சித்திரை மாதத்தின் முதல் நாள் தமிழ் புத்தாண்டு தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் நாளை தமிழ் புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. கடந்த வருடம் […]

செய்திகள்

+2 பொதுத்தேர்வு ஜூன் மாதம் ஒத்திவைக்கப்படுகிறதா? – அதிகாரிகள் ஆலோசனை

தமிழகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் +2 பொதுத்தேர்வை ஒத்தி வைப்பது குறித்து அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் பள்ளி மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதை அடுத்து தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் மே 3-ஆம் தேதி 12ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பை குறைக்கும் வகையில் […]

IPL-2021

IPL 2021: பஞ்சாப் கிங்ஸுக்கு எதிராக ராஜஸ்தான் ராயல்ஸ் 4 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி

ராஜஸ்தானுக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அதிரடியாக ஆடி உள்ளது. ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் 6 விக்கெட்டி இழப்பிற்கு 221 ரன்கள் எடுத்திருந்தது. 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது பஞ்சாப் அணி ,சஞ்சு சாம்சனின் செஞ்சுரி வீணானது ராஜஸ்தானுக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் வெறித்தனமான அதிரடி ஆட்டத்தை ஆடி உள்ளது. ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் 6 விக்கெட்டிற்கு 221 ரன்கள் எடுத்திருந்த நிலையில் . 222 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களம் […]

வணிகம்

ஏப்ரல் 18 ஆம் தேதி RTGS முறையில் பண பரிமாற்ற செய்ய 14 மணிநேரம் தடை

Real-Time Gross Settlement (RTGS)என்பது பண பரிமாற்ற முறையை குறிக்கிறது. ஆர்டிஜிஎஸ் என்பது ஒரு தனிநபர் அடிப்படையில் பணம் செலுத்துவதற்கான தொடர்ச்சியான செயல்முறையாகும். ரிசர்வ் வங்கி ஏப்ரல் 18 ஆம் தேதி 14 மணி நேரம் ஆர்டிஜிஎஸ் (RTGS) முறையில் பண பரிவர்த்தனை செய்ய முடியாது என்று கூறியுள்ளது. தொழில்நுட்ப முறையை மேம்படுத்துவதற்கான பணிகள் நடைபெறுவதால் வரும் ஞாயிற்றுகிழமை நள்ளிரவு 12 மணி முதல், பிற்பகல் 2 மணி வரை பணபரிவர்த்தனை செய்ய முடியாது என்று கூறப்பட்டுள்ளது. […]

செய்திகள்

தமிழகத்தில் கடந்த நான்கு நாட்களில் ரூ.2.77 கோடி வசூல்

தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகளை மீறி முகக்கவசம் அணியாமல் வெளியில் சுற்றியவர்களிடத்திலிருந்து நேற்று வரை ரூ.2,52,34,900 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. முகக்கவசம் அணியாதது, தனிநபர் இடைவெளியை பின்பற்றாதது ஆகியவற்றின் தொடர்பாக இதுவரை 1.30 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. தனிநபர் இடைவெளியை கடைப்பிடிக்காமல் இருந்தவர்கள் மீது ஏப்ரல் 8 முதல் 11 வரை மாநிலம் முழுவதும் தமிழக போலீசாரால் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தில் கொரோனா விதிகளை மீறிவர்களிடம் கடந்த நான்கு நாட்களில் ரூ.2.77 கோடி அபராதம் காவல்துறை வசூல் […]

கல்வி

டிஎன்பிஎஸ்சி தேர்வு குறித்த முக்கிய அறிவிப்பு

உதவி தோட்டக்கலை அலுவலர் , உதவி வேளாண்மை அலுவலர் பதவிகளுக்கான எழுத்துத் தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. டிஎன்பிஎஸ்சி தேர்வு தொடர்பாக தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் சுதன் செய்தி அறிவித்துள்ள செய்தி குறிப்பில், “அரசு பணியாளர் தேர்வாணையமான, டிஎன்பிஎஸ்சி அறிவிப்பின்படி படி, உதவி வேளாண்மை அலுவலர், உதவி தோட்டக்கலை அலுவலர், தோட்டக்கலை உதவி இயக்குனர், தோட்டக்கலை அலுவலர், வேளாண்மை அலுவலர் விரிவாக்கம் ஆகிய பதவிகளுக்கான எழுத்து தேர்வு திட்டமிட்ட படி நடைபெறும் என்று கூறினார். […]

வணிகம்

எஸ்பிஐ யோனோ வழங்கும் சூப்பர் சலுகை

இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான எஸ்பிஐக்கு நாடு முழுவதும் 44 கோடிக்கு மேற்பட்ட வாடிக்கையாளர்கள் இருந்து வருகின்றன. அண்மைக்காலமாக எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகிறது. போஸ்ட் ஆபீஸில் பணம் போட செலவு பண்ணணுமா? இதுதான் ரூல்ஸ்! தற்போது எஸ்பிஐ வங்கிவுடன் டொயோட்டா நிறுவனம் கூட்டணி அமைத்து, சலுகைகளை அறிவித்துள்ளது. குறிப்பாக, கார் வாங்கும் நோக்கத்தில் இருப்போருக்கு இந்த சலுகை பொருந்தும் . இதன்படி, எஸ்பிஐ வங்கியின் யோனோ (YONO) ஆப்பில் டொயோட்டா கார் […]

செய்திகள் வணிகம்

ஜன் தன் கணக்கு வைத்திருப்பவர்களிடமிருந்து அதிக பணம் வசூலிக்கும் வங்கிகள்

இந்தியாவில் உள்ள ஏழை, எளிய மக்கள் அனைவரையும் வங்கிச் சேவைக்குள் கொண்டுவரும் நோக்கத்தில் 2014ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் பிரதமர் நரேந்திர மோடியால் கொண்டுவரப்பட்ட திட்டம் பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா திட்டம்(PMJD). இந்த திட்டத்தில் ஒரு லட்சம் ரூபாய்க்கான காப்பீடு, ஓய்வூதியம் உள்ளிட்ட வசதிகளோடு, மத்திய, மாநில அரசால் வழங்கப்படும் நிதியுதவிகள் ஜன் தன் யோஜனா கணக்குகளில் நேரடியாகச் செலுத்தப்படுகின்றன. மாநில அரசுத் திட்டத்தின் பயனாளிகளின் வங்கிக் கணக்குகளுக்கு அதற்கான தொகை உடனுக்குடன் அனுப்பப்படுகிறது. […]

gpay-paytm-phonepe செய்திகள்

கூகுள்பெ ,போன்பெ, பெடிஎம் மூலம் EMI செலுத்துவது எப்படி?

ஒரு காலத்தில் வங்கியில் கடன் வாங்க வேண்டும்? அதனை திருப்பி செலுத்தா வேண்டுமெனில் வங்கிக்கு சென்று மணிக் கணக்கில் நின்று தான் வாங்க வேண்டும், கட்ட வேண்டும். ஆனால் இன்றே உங்கள் வீட்டில் இருந்தவாரு, இந்த செயல்பாடுகளை செய்து கொள்ளும் அளவிற்க்கு தொழில்நுட்பம் முன்னேறிவிட்டது. அந்த நிலையில் யுபிஐ பேமெண்ட் சேவைகள் வங்கி சேவைகளை இன்னும் எளிதாக்கும் விதமாக யுபிஐ பேமெண்ட் சேவைகள் வந்துள்ளது. இந்த யுபிஐ சேவைகளை பயன்படுத்தி நீங்கள் வாங்கும் பால், காய்கறி, நகை, […]

கல்வி

பிளஸ்-2 தேர்வை ரத்து செய்வதற்கான வாய்ப்பு இல்லை – எடப்பாடி பழனிசாமி

முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பிளஸ்-2 தேர்வு தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது. பிளஸ்-2 தேர்வு மே 3-ந் தேதி தொடங்கி மே 21 தேதி முடிவடையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 2 லட்சத்து 50 ஆயிரம் மாணவ-மாணவிகள் பொது தேர்வவை எழுத உள்ளனர். 12 ஆம் வகுப்பிற்கான செய்முறை தேர்வு ஏப்ரல் 16-ந் தேதி நடத்தப்பட உள்ளது. இந்த இரு தேர்வுகளையும் நடத்துவதா அல்லது ஒத்தி வைப்பதா என்பது தொடர்பாக ஆலோசனை […]

செய்திகள் டெக்னாலஜி

அதானி நிறுவனத்துடன் கை கோர்க்கும் ஃப்ளிப்கார்ட்

ஃப்ளிப்கார்ட் தனது பொருட்களைக் குறித்த நேரத்தில் வாடிக்கையாளர்களிடம் சேர்க்க அதானி நிறுவனத்துடன் இணைந்துள்ளது. ஃப்ளிப்கார்ட் உலகின் மிகப்பெரிய இ மாகர்ஸ் நிறுவனமான விளங்குகிறது. தற்போது இந்தியாவில் ஃப்ளிப்கார்ட் நிறுவனம் முன்னணியில் உள்ளது. இந்த நிறுவனத்துக்கு பல லட்சக்கணக்கில் வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள். இந்நிறுவனம் அனைத்து வகையான பொருட்களையும், எலக்ட்ரானிக்ஸ் உள்ளிட்ட பொருட்களையும் வர்த்தகம் செய்து வருகிறது. தற்போது அதானி லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்துடன் ஃப்ளிப்கார்ட் கை கோர்த்துள்ளது. வாடிக்கையாளர்களுக்கு குறித்த நேரத்தில் தங்கள் பொருட்களைக் கொண்டு சேர்க்க அதானி நிறுவனத்துடன் […]

அறிந்துகொள்வோம்

நல்ல காளானை தேர்தெடுப்பது எப்படி? டிப்ஸ்..!

இந்தியாவைப் பொறுத்த மட்டில் மொட்டு காளான்கள் மட்டுமே பெரிய அளவில் விற்பனை செய்யப்படுகின்றன. வெவ்வேறு அளவுகளில், சுவைகளில் இருக்கும் காளான்கள் பற்றி பலரும் தெரிந்திருக்கவாய்ப்பில்லை என்பதே உண்மை. காளானை விரும்பி உண்பவர்களை நீங்கள், சந்தைகளில் வெவ்வேறு வகையான காளான்கள் உள்ளன. இந்தியாவைப் பொறுத்த வரை பட்டன் காளான்கள் மட்டுமே பெரிய அளவில் விற்பனைச்செய்துவருகின்றனர். வெவ்வேறு விதமான அளவுகளிலும் சுவைகளிலும் இருக்கும் காளான்கள் பற்றி பலரும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்பதால், புதிய காளான்களின் வகைகளை பற்றியும், நல்ல காளான்களை […]

சினிமா

‘மாநாடு’ திரைப்பட நடிகர் சிம்பு மற்றும் இயக்குனர் வெங்கட் பிரபுவுக்கு வாழ்த்துக்கள்

கடந்த வாரம் வெளியான ‘கர்ணன்’ திரைப்படத்தை பிரபலங்களும், ரசிகர்களும் பாராட்டி வருகின்றனர். முதல் நாள், முதல் காட்சி பார்த்த தனுஷ் ரசிகர்களோ, ‘இன்னொரு தேசிய விருதை தனுஷுக்கு எடுத்து வைங்கப்பா’ என சொல்லி மிரட்டி உள்ளனர். இந்நிலையில் தற்போது ‘மாநாடு’ திரைப்படத்தில் நடித்து வரும் சிம்புவை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ஆஹா, ஓஹோ என புகழ்ந்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். ‘ஈஸ்வரன்’ திரைப்படத்திற்கு பின் சிம்புவின் கம்பேக் திரைப்படமாக ‘மாநாடு’ ரசிகர்களால் மிகப்பெரிய அளவில் […]

IPL-2021 விளையாட்டு

IPL 2021 SRH vs KKR: கொல்கத்தா 10 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத்தை தோற்கடித்தது !

14-வது ஐ.பி.எல்,T-20 நேற்று சென்னை சேப்பாக்கத்தில் அரங்கேறிய 3-வது லீக் போட்டியில் முன்னாள் சாம்பியன்கள் ஐதராபாத் சன்ரைசர்ஸ்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற ஐதராபாத் கேப்டன் வார்னர் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து கொல்கத்தா அணியின் இன்னிங்சை நிதிஷ் ராணாவும், சுப்மான் கில்லும் பவுண்டரியுடன் அதிரடிவுடன் ஆரபித்தனர் சந்தீப் ஷர்மாவின் ஓவரில் ‘ஹாட்ரிக்’ பவுண்டரி பறக்க விட்ட நிதிஷ் ராணா தொடர்ந்து தனது ஆட்டத்தை காட்டினார். பவர்-பிளேயான முதல் 6 […]