Adblocker detected! Please consider reading this notice.

We've detected that you are using AdBlock Plus or some other adblocking software which is preventing the page from fully loading.

We don't have any banner, Flash, animation, obnoxious sound, or popup ad. We do not implement these annoying types of ads!

We need money to operate the site, and almost all of it comes from our online advertising.

Please add tamilguru.in to your ad blocking whitelist or disable your adblocking software.

×
anna university செய்திகள்

இணையவழி செமஸ்டர் தேர்வு முடிவில் குளறுபடி; மறுமதிப்பீடு செய்ய திட்டம் – அண்ணா பல்கலைக்கழகம்

அண்ணா பல்கலைக் கழக இணையவழி செமஸ்டர் தேர்வு முடிவுகளில் ஏற்பட்ட குளறுபடிகளால் பொறியியல் கல்லூரி மாணவர்கள் மிகுந்த மன அழுத்ததில் இருக்கிறார்கள். செமஸ்டர் தேர்வு முடிவுகளுக்கு அண்ணா பல்கலைக் கழகம் இதுவரை முறையான விளக்கம் ஏதும் அளிக்கவில்லை என்று அண்ணா பல்கலைக் கழகம் மீது பொறியியல் கல்லூரிகள் கடும் அதிருப்தியில் இருக்கிறது. பொறியியல் மாணவர்களுக்கு கடந்த ஆண்டு நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் நடக்க இருந்த செமஸ்டர் தேர்வுகள், கொரோனா பரவல் காரணமாக அண்ணா பல்கலைக்கழகம் தள்ளி […]

சினிமா

மாரடைப்பு காரணமாக நடிகர் விவேக் தனியார் மருத்துவமனையில் அனுமதி

நடிகர் விவேக் தீடிரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இருதய கோளாறால் பாதிக்கப்பட்ட அவர் மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 59 வயதான நடிகர் விவேக் நேற்று(வியாழக்கிழமை) சென்னையில் உள்ள ஓமந்தூரார் மருத்துவமனையில் COVIT-19 தடுப்பூசி போட்டுக்கொண்டார். கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட பிறகு செய்தியாளர்களை சந்தித்தார். கொரோனா தடுப்பூசியை அனைவரும் போட்டுக்கொள்ளவேண்டும். கொரோனா தடுப்பூசி குறித்து எவ்வித பயமும் தேவையில்லை. தடுப்பூசி செலுத்திக்கொண்ட பின்பும் கொரோனா வைரஸ் பரவ வாய்ப்பு உள்ளது. ஆனால் […]

அறிந்துகொள்வோம் மருத்துவம்

தயிர் உடன் சில உணவுப்பொருட்களை சேர்த்து சாப்பிடுவதால் ஏற்படும் விளைவுகள்

தயிர் இயற்கையான உணவு என்றாலும், இதனுடன் சில குறிப்பிட்ட உணவு வகைகளை கலந்து சாப்பிட்டால், நமக்கு ஏற்படும் நன்மைகளை விட பக்கவிளைவுகளே அதிகம். ஒரு பாத்திரத்தில் சுத்தமான பால் கிரீம் நிரம்பிய தயிரில், அரிந்த பழங்களை அதில் தூவி சாப்பிடுவது என்பதே அளப்பரிய ஆனந்தத்தை தரும் என்பதில் யாருக்கும் எவ்வித மாற்றுக்கருத்தும் இருக்கப் போவதில்லை. வைட்டமின் பி2, கால்சியம், வைட்டமின் பி12, மெக்னீசியம், பொட்டாசியம் போன்றவை தயிரில் மிக அதிகளவில் உள்ளன. தயிர் எளிதில் செரிமானம் அடையக் […]

சினிமா

தனுஷுக்கு ஜோடியாகும் உப்பேனா திரைப்பட புகழ் க்ரித்தி ஷெட்டி

தனுஷ் நடிப்பில் பாலாஜி மோகன் இயக்கத்தில் வெளியான மாரி திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரேவற்பு பெற்றது. இதை அடுத்து மாரி 2 திரைப்படத்தை எடுத்து வெளியிட்டனர். இந்நிலையில் பாலாஜி மோகன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் மூன்றாவது முறையாக நடிக்கவிருக்கிறார். அது மாரி 3 படமா அல்லது புது கதையா என்பது இதுவரை தெரியவில்லை. பாலாஜி மோகன் இயக்கும் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக ட்ரிண்டிங்கி தெலுங்கு நடிகை க்ரித்தி ஷெட்டியை நடிக்க வைக்க முடிவு செய்துள்ளார்களாம். இது […]

செய்திகள்

+2 மாணவர்களுக்கு செய்முறை தேர்வு இன்று தொடங்கியது.

கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் பிளஸ் 2 மாணவர்கள் தவிர, மற்ற மாணவர்களுக்கு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு, ‘ஆல் பாஸ்’ வழங்கப்பட்டது. அதன்படி, பிளஸ் 2 மாணவர்களுக்கான இன்று செய்முறை தேர்வு தொடங்கி உள்ளது. இன்று தொடங்கி 23 ஆம் தேதி வரை நடக்கும் இந்த செய்முறை தேர்வை 1.5 லட்சம் மாணவர்கள் எழுதுகிறார்கள். பொதுவாக இயற்பியல், வேதியியல், விலங்கியல், உயிரியல், உயிரி தாவரவியல், கணினி அறிவியல் ஆகிய பாடப்பிரிவுகளுக்கு செய்முறை தேர்வு நடத்தப்படுகிறது. மேலும் பிளஸ் […]

அறிந்துகொள்வோம்

செவ்வாய் கிரகத்தின் நீல குன்றுகளின் அற்புதமான புகைப்படங்களை நாசா வெளியிட்டுள்ளது

ஆண்டுகள் கடந்தகொண்டே இருக்கிறது , கண்டுபிடிப்புகளின் புதிய புகைப்படங்கள் மற்ற கிரகங்களில் வெளியிடப்படுகின்றன. இந்த அர்த்தத்தில், நாசாவில் சமீபத்தில் ஒரு பெரிய அளவிலான பொருளைப் பகிர்ந்துள்ளது , இது சூரிய மண்டலத்தில் உள்ள மற்ற கிரகங்களின் செயல்பாடுகளை புரிந்துகொள்ள அனுமதிக்கிறது. இந்த முறை செவ்வாய் கிரகத்தின் 2002 மற்றும் 2004 க்கு இடையில் இந்த கிரகத்தின் இயற்கையான செயல்பாட்டின் பதிவு செவ்வாய் ஒடிஸி சுற்றுப்பாதை மற்றும் சில சிறந்த புகைப்படங்கள் செய்யப்பட்டன. அந்த இடத்தில் மணல் “நீல […]

IPL-2021

CSK அணி இன்று பஞ்சாப் அணியுடன் மோதல்

ஐபிஎல் இரண்டாவது லீக் போட்டியில் இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பஞ்சாப் கிங்ஸ் அணியுடன் விளையாட உள்ளது. முதல் லீக் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியை எதிர்த்து போட்டியிட்ட சிஎஸ்கே அணி தோல்வி அடைந்தது. ஐபிஎல் நிர்வாகம் முதல் போட்டியில் தோனிக்கு அபராதம் விதித்தது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில் , “மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசனின் இரண்டாவது லீக் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணியை எதிர்த்து விளையாடிய சென்னை சூப்பர் […]

citibank செய்திகள்

இந்தியாவை விட்டு வெளியேறும் பிரபல வங்கி

இந்தியாவில் தங்களது சேவைகளை நிறுத்திக் கொள்ளப்போவதாக அமெரிக்காவை சேர்ந்த முன்னணி வங்கியான ‘சிட்டி பேங்க்’ தெரிவித்துள்ளது. மேலும் சீனா, மலேசியா, பஹ்ரைன், ஆஸ்திரேலியா, ரஷ்யா, இந்தோனேசியா , போலந்து, பிலிப்பைன்ஸ் , வியட்நாம், கொரியா, தாய்லாந்து மற்றும் தைவான் ஆகிய நாடுகளிலும் வங்கி சேவைகளை நிறுத்தப்போவதாக சிட்டி பேங்க் தெரிவித்து இருக்கிறது. அமெரிக்காவின் மூன்றாவது பெரியவங்கி ‘சிட்டி பேங்க்’ குழுமம் ஆகும். இந்த வங்கி இந்தியாவில் செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் 12 லட்சம் வங்கி சேவை […]

கல்வி

மே மாதம் துவங்கும் ஆன்லைன் அரியர் தேர்வுகள்

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் கடந்த ஆண்டுக்கான இறுதி தேர்வுகளை ரத்து செய்ய உயர் கல்வித்துறை உத்தரவிட்டது. மாணவர்களுக்கான அரியர் தேர்வுகளும் ரத்து செயப்பட்டது. தேர்வுக்கான கட்டணம் செலுத்தி இருந்தால் திரும்ப பெற்றுக்கொள்ளாம் என்று அறிவித்து இருந்தது. அரியர் தேர்வுகளை நடத்தவும் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், அண்ணா பல்கலைகழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி, திருச்செந்துாரைச் சேர்ந்த வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன், மனு தாக்கல் செய்துனர். இந்த மனுக்கள், தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, […]

செய்திகள்

அனைவருக்கும் 10 நாளில் கொரோனா தடுப்பூசி போடப்படும்-சுகாதாரத்துறை இயக்குனர் கூறியுள்ளார்.

45 வயதுக்கு மேலுள்ள அனைவருக்கும் 10 நாட்களில் கொரோனா தடுப்பூசி போடப்படும் என தமிழக அரசின் பொது சுகாதாரத்துறை இயக்குனர் டி.எஸ்.செல்வவிநாயகம் கூறியுள்ளார். நேற்று தமிழகம் முழுவதும் கொரேனா தடுப்பூசி திருவிழா தொடங்கப்பட்டது. இதையடுத்து நாளை முதல் 3 நாட்கள் தொடர்ச்சியாக தடுப்பூசி போடும் பணிக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் வரும் 25ஆம் தேதிக்குள் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போட உத்தரவை பிறப்பித்துள்ளது தமிழக அரசு “தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா தடுப்பூசி […]

செய்திகள் வர்த்தகம்

பெட்ரோல், டீசல் விலையின் இன்றைய நிலவரம்

சென்னையில் 15 நாட்களுக்கு பிறகு, பெட்ரோல் மற்றும் டீசல் விலை சற்று குறைந்து இருக்கிறது. நாடு முழுவதும் சமீபகாலமாக பெட்ரோல், டீசல் விலை முயல் வேகத்தில் அதிகரித்து வந்தது. தற்போதுபெட்ரோல், டீசல் விலை ஆமை வேகத்தில் குறைந்தும் வருகிறது. அந்த வகையில் 15 நாட்களுக்குப் பிறகு சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலை சற்று குறைந்துள்ளது. சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் 15 காசுகள் குறைந்து, 92 ரூபாய் 43 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், […]

செய்திகள்

காங்கிரஸ் கட்சி புதிய youtube சேனலை நேற்று துவக்கியது

காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகளை அனைத்து மக்களுக்கு கொண்டு சேர்க்கும் நோக்கத்தில், ‘ஐஎன்சி டிவி’ என்ற பெயரில் புதிய ‘யூடியூப்’ சேனலை நேற்று துவக்கியது. ஊடகங்கள் காங்கிரஸ் கட்சியின் செய்திகளை முழுமையாக வெளியிடாமல் பாரபட்சத்துடன் நடந்து கொள்வதாக காங்கிரஸ் கட்சியினர் உள்ளிட்ட பல்வேறு எதிர்கட்சியினர் குற்றம்சாட்டி வருகின்றனர். நாளுக்கு நாள், காங்கிரஸ் கட்சி பலவீனமடைந்து வருவது தொடர்பாக செய்தியாளர்கள் ராகுலிடம் சமீபத்தில் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், ஊடகங்கள் உட்பட நாட்டின் ஜனநாயக அமைப்புகள் அனைத்தும் காங்கிரஸ் கட்சிக்கு […]

செய்திகள்

டாஸ்மாக் கடைகள் செயல்படும் நேரத்தை மாற்றியமைக்க அரசு திட்டம்

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து கொண்டே வரும் நிலையில் நேற்றைய தினம் புதிதாக 7,819 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 54,315ஆக அதிகரித்துள்ளது. புதிதாக 3,464 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 25 பேர் பலியானதன் மூலம் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 12,970ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக 97,668 பேருக்கு வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதையொட்டி தமிழகம் முழுவதும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு […]

செய்திகள்

ரேஷன் கடைகளில் பயோமெட்ரிக்கு பதிலாக மாற்றுவழி வேண்டும் – பொதுமக்கள் கோரிக்கை

தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாவது அலை மிக வேகமாக பரவி வருவதால், சுமார் நாளொன்றுக்கு 8,000 பேர் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். தற்போது கொரோனா நோய் தொற்று பரவல் அதிகமாக உள்ளதால், நியாயவிலைக் கடைகளில் பயன்படுத்தப்படும் பயோமெட்ரிக் முறையின் மூலமும் நோய்த் தொற்று அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்று மக்கள் அச்சப்படுகிறார்கள். இந்த பயோமெட்ரிக் முறையினால் கொரோனா நோய் தொற்று அதிகரிக்க கூடும், அதனால் இந்த முறையை மாற்ற அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் […]