Adblocker detected! Please consider reading this notice.

We've detected that you are using AdBlock Plus or some other adblocking software which is preventing the page from fully loading.

We don't have any banner, Flash, animation, obnoxious sound, or popup ad. We do not implement these annoying types of ads!

We need money to operate the site, and almost all of it comes from our online advertising.

Please add tamilguru.in to your ad blocking whitelist or disable your adblocking software.

×
செய்திகள்

தமிழகத்தில் உள்ள 8 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு

வெப்பச்சலனம் காரணமாக நீலகிரி, தேனி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர் மற்றும் ராணிப்பேட்டை ஆகிய 8 மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்குள் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக அறிவித்துள்ளது. தென் கடலோர மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் லேசான மழை பெய்யக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மைய […]

Black fungus செய்திகள்

கொரோனாவை தொடர்ந்து மிரட்டும் கருப்பு பூஞ்சை யாரை தாக்கும் – மருத்துவர்கள் விளக்கம்

நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த பல சிறந்த முயற்சிகள் எடுத்தாலும், தற்போது மியூகோமிகோசிஸ் என்ற கருப்பு பூஞ்சை நோய் தொற்று காரணமாக மற்றொரு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைபவர்கள் அல்லது குணமடைந்தவர்களிடம் இந்த நோய் கண்டறியப்பட்டுள்ளது. நிரிழிவு நோயாளிகளுக்கு, எதிர்ப்பு சக்தி குறைவாக இருந்தால் இந்நோய் பாதிப்பு ஏற்படுவதாக கூறப்படுகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் ஸ்டிராய்டு என்ற மருந்தை எடுத்து கொள்கிறார்கள். இந்த மருந்தை கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிரிழிவு நோயாளிகள் உட்கொள்ளும் போது இவர்களுக்கு […]

அறிந்துகொள்வோம்

வாடிக்கையாளர்களுக்கு SBI வங்கி எச்சரிக்கை

இந்தியாவில் மிக பெரிய பொது துறை வங்கிகளில் ஒன்றான பாரத ஸ்டேட் வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு ஆன்லைன் சேவைகளை வழங்கி வருகிறது. SBI வங்கி வாடிக்கையாளர்கள் ஆன்லைன் பரிவர்த்தனை செய்யும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று வங்கி நிர்வாகம் எச்சரித்துள்ளது. ஆன்லைன் பரிவர்த்தனை செய்யும் போது பல்வேறு மோசடிகள் நடைபெறுகிறது. இதனால் SBI உள்ளிட்ட அனைத்து வங்கிகளும் தனது வாடிக்கையாளர்களுக்கு அறிவுரைகளை வழங்கி வருகின்றன. இதுகுறித்து SBI வங்கி தனது ட்விட்டர் பக்கத்தில் […]

செய்திகள்

3 மாவட்டங்களில் முதல்வர் ஸ்டாலின் நாளை நேரில் ஆய்வு

கொரோனா நோய் தொற்றின் வேகம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் ஊரடங்கு அமலபடுத்தியும் கொரோனா தொற்றின் தாக்கம் குறையவில்லை. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 33,059 ஆக உயர்ந்துள்ளது. மொத்தப் பாதிப்பு எண்ணிக்கை 16,64,350 ஆக உள்ளது. நேற்று ஒரு நாளில் 364 பேர் கொரோனா தொற்றால் உயிர் இழந்துள்ள நிலையில் மொத்த உயிர் இழப்பு எண்ணிக்கை 18,329 ஆக உயர்ந்துள்ளது. நோய் தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதால் மே […]

செய்திகள்

வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் வெளியே வந்தால் ரூ.2,000 அபராதம்!

ஹைலைட்ஸ் : தமிழகத்தில் குறிப்பாக சென்னை, கோவை, திருச்சி ஆகிய இடங்களில் பாதிப்பு அதிகமாக உள்ளது. சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நபர்கள் முதல் முறை வெளியே வந்தால் 2 ஆயிரம் ரூபாய் அபராதம். இரண்டாம் முறை வெளியே வந்தால் பாதுகாப்பு மையத்திற்கு அழைத்துச் செல்லப்படுவார்கள். தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது. இதை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தில் குறிப்பாக […]

செய்திகள்

முதல்வர் ஸ்டாலின் தொண்டு நிறுவனங்களுடன் நாளை ஆலோசனை

தமிழகத்தில் உள்ள மக்களை கொரோனா வைரஸ் அதிக அளவில் பாதித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 30 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்றால் உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள முன்கள பணியாளர்களும் கொரோனா தொற்றுக்கு ஆளாகிறார்கள். இதில் சிலர் உயிர் இழந்து உள்ளனர். கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் தன்னார்வலர்கள் சிலர் கொரோனா நோய் […]

செய்திகள் விளையாட்டு

கிரிக்கெட் வீரர்களின் மனநலம் பற்றிப் பேசிய சச்சின் டெண்டுல்கர்

ஹைலைட்ஸ்: பயோ- பபுளில் இருப்பது மன அழுத்தம் தருவதாக சில வீரர்கள் கூறியிருக்கிறார்கள். கிரிக்கெட் வாழ்க்கையில், சச்சின் பெரும்பாலான சமயங்களில் தான் பதற்றமாக இருந்ததாக கூறியிருக்கிறார். ஒரு ஆட்டத்துக்கு உடல் ரீதியாகத் தயாராகுவதுடன், மன ரீதியாகவும் தயாராக வேண்டும். கொரோனா பரவல் காரணமாக கிரிக்கெட் ஆட்டங்கள் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் விளையாட்டு வீரர்களின் மனநலம் பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது விளையாட்டு வீரர்களின் மனநலம் குறித்த உரையாடலுக்கு முக்கியத்துவம் அதிகரித்துள்ளது. குறிப்பாக பயோ- பபுளில் இருப்பது மன அழுத்தம் […]

செய்திகள்

புதிய ரேஷன் அட்டைதாரகளுக்கும் கொரோனா நிவாரண நிதி வழங்கப்படும்

தமிழகத்தில் நடைபெற்ற நட்டமன்ற தேர்தலில் திமுக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் கொரோனா பேரிடர் காலத்தில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஏற்பட்டுள்ள துன்பங்களை போக்க அரிசி குடும்ப அட்டை வைத்து உள்ளவர்களுக்கு கலைஞர் பிறந்த நாள் முதல் ரூ. 4000/– வழங்கப்படும் என முதல்வர் உறுதியளித்திருந்தார்.   தற்போது கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை வித்து உள்ளது. ரூ.4153.39 கோடி செலவில், கொரோனா நிவாரண நிதியின் முதல் தவணையாக ரூ.2000 வழங்க […]

சினிமா

1000 படங்களின் ஐஎம்டிபி தரவரிசையில் சூரரை போற்று 3 ஆம் இடம்

சுதா கொங்கராவின் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான சூரரை போற்று திரைப்படம் கடந்த ஆண்டு அமேசான் பிரைம் OTT தளத்தில் வெளியானது. நடிகர் சூர்யாவின் 38 வது திரைப்படம். இந்த திரைப்படத்தில் மலையாள நடிகை அபர்ணா பாலமுரளி நடித்துள்ளார். ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் ஊர்வசி, கருணாஸ், விவேக் பிரசன்னா, கிருஷ்ணகுமார் ஆகியோர் நடித்துள்ளனர். ஏர் டெக்கான் நிறுவனர் கேப்டன் கோபிநாத் அவரின் சுயசரிதையை மையமாக கொண்டு இந்த திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. சினிமா தகவல்களை […]

செய்திகள்

நேற்று முதல் வங்கிகள் செயல்படும் நேரம் குறைப்பு

ஹைலைட்ஸ் : அத்தியாவசிய கடைகள் மட்டும் காலை 10.00 வரை செயல்பட அனுமதி வங்கிகள் திங்கள், புதன் மற்றும் வெள்ளி ஆகிய மூன்று நாட்கள் மட்டும் செய்யப்பட அனுமதி மே 17 ஆம் தேதி முதல் வங்கிகள் காலை 9 மணி முதல் 11 மணி வரை மட்டுமே செயல்படும் கொரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு வரும் நிலையில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தமிழகத்தில் கடந்த 10 ஆம் […]

செய்திகள்

கீழமை நீதிமன்றங்களின் பணிகள் மறு உத்தரவு வரும் வரை இயங்காது – உயர்நீதிமன்றம் அறிவிப்பு

ஹைலைட்ஸ்: சென்னை உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளர் தனபால் சில உத்தரவுகளைப் பிறப்பித்து இருக்கிறார். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள அனைத்து கீழமை நீதிமன்றங்களின் பணிகள் மறு உத்தரவு வரும் வரை இயங்க கூடாது கைதிகளை சிறையில் அடைப்பதற்கான நடைமுறையை தவிர, மற்ற பணிகள் நிறுத்திவைக்கப்படுகிறது. கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நெல்லை தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி நீஷ் இன்று மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள அனைத்து […]

செய்திகள்

கொரோனா சிகிச்சைக்கு உதவும் டிஆர்டிஓ வின் புதிய மருந்து

டெல்லியில் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும், சுகாதார துறை அமைச்சர் ஹர்ஷவர்தனும் சேர்ந்து கொரோனா சிகிச்சைக்கு உதவும் டிஆர்டிஓ வின் புதிய கொரோனா தடுப்பு மருந்தான 2-DG ஐ பயன்பாட்டிற்கு துவக்கி வைத்தனர். டிஆர்டிஓ வின் இன்மாஸ் ஆய்வக விஞ்ஞானி கண்டுபிடித்த 2-DG தடுப்பு மருந்து பவுடர் வடிவில் உள்ளது. இந்த பவுடரை நீரில் கலந்து பருகினால் 2 அல்லது 3 தினங்களுக்கு முன்னதாகவே கொரோனா வைரஸ் தொற்று சரி ஆகிவிடும் என்று ஆய்வின் மூலம் […]

செய்திகள்

தமிழக முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.1 கோடி – அதிமுக அறிவிப்பு

ஹைலைட்ஸ்: அதிமுக சார்பில் தமிழக முதல்வர் பொது நிவாரண நிதிக்கு ரூ.1 கோடி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக எம்.பி மற்றும் எம்.எல்.ஏக்களின் ஒருமாத ஊதியம் தமிழக அரசின் நிவாரண நிதிக்கு வழங்கப்படும். முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்கு பலரும் நிதி அளித்து வருகின்றார்கள். அதிமுக சார்பில் தமிழக முதல்வர் பொது நிவாரண நிதிக்கு ரூ.1 கோடி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாமல் அதிமுக எம்.பி மற்றும் எம்.எல்.ஏக்களின் ஒருமாத ஊதியம் தமிழக அரசின் நிவாரண […]

செய்திகள்

தமிழகத்தில் கடந்த இரண்டு நாட்களாக கொரோனா பாதிப்பு 33 ஆயிரத்தை தாண்டியுள்ளது!

ஹைலைட்ஸ் : தமிழகத்தில் நேற்று ஒரு நாள் மட்டும் ஒரு லட்சத்து 59 ஆயிரத்து 706 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. சென்னையில் நேற்று ஒரே நாளில் 6 ஆயிரத்து 247 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. கொரோனா நோய் தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா பாதிப்புக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டு இருக்கிறது. மேலும் ஆக்சிஜன் பற்றாக்குறையினால் […]