Adblocker detected! Please consider reading this notice.

We've detected that you are using AdBlock Plus or some other adblocking software which is preventing the page from fully loading.

We don't have any banner, Flash, animation, obnoxious sound, or popup ad. We do not implement these annoying types of ads!

We need money to operate the site, and almost all of it comes from our online advertising.

Please add tamilguru.in to your ad blocking whitelist or disable your adblocking software.

×
செய்திகள்

சிறு துறைமுகங்களை முறைப்படுத்தும் சட்ட முன் வரவுக்கு எதிர்ப்பு

மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் உள்ள சிறு துறைமுகங்களை முறைப்படுத்த மத்திய அரசு கொண்டு வரவுள்ள சட்ட முன்வரைவு எதிராக குரல் எழுப்ப வேண்டும் என கடலோர மாநிலங்களின் முதலமைச்சர்களை தமிழக முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். குஜராத், மகாராஷ்டிரா கர்நாடகா, கேரளா, ஆந்திரா, ஒடிசா, மேற்கு வங்கம் புதுச்சேரி ஆகிய 9 மாநிலங்களின் முதலமைச்சர்களுக்கு அவர் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். இதுவரை மாநில அரசுகள் நிர்வகித்து நெறிப்படுத்தி வரும் சிறு துறைமுகங்களின் நிர்வாகத்தில் மாற்றம் செய்வது தொடர்பாக […]

டெக்னாலஜி வர்த்தகம்

BMW நிறுவனம் 3 புதிய கார்களை அறிமுகப்படுத்தியுள்ளது

ஜெர்மனியை சார்ந்த கார் தயாரிப்பு நிறுவனமான BMW செவ்வாய்க்கிழமை அன்று தனது மினி பிராண்டின் கீழ் மூன்று புதிய கார்களை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. அனைத்து புதிய மினி 3-டோர் ஹட்ச் விலை ரூ .38 லட்சம், அனைத்து புதிய மினி கன்வெர்ட்டிபிள் ரூ .44 லட்சம் மற்றும் அனைத்து புதிய மினி ஜான் கூப்பர் ஒர்க்ஸ் ஹட்ச் ரூ .45.5 லட்சம். இதுகுறித்து BMW குழுமத்தின் இந்தியத் தலைவர் விக்ரம் பவா ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார். புதிய […]

கல்வி

தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் 75 சதவீத கட்டணம் மட்டுமே வசூலிக்க அரசு உத்தரவு

நாடு முழுவதும் கொரோனா நோய் தொற்று பரவல் அதிகரித்து வருவதால் கடந்த ஆண்டிற்கான வகுப்புகள் ஆன்லைன் மூலம் நடத்தப்பட்டது. 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் தேர்வுகள் ஏதும் இன்றி தேர்ச்சி பெற்றதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த ஆண்டிற்கான மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று வருகிறது. தனியார் பள்ளிகளில் அதிக கட்டணம் வசூலிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. முழு கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகளுக்கு பள்ளி கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.   தமிழகத்தில் உள்ள […]

Corona Vaccine செய்திகள்

கொரோனா தடுப்பூசி குறித்து எழும் சந்தேகங்களும், குழப்பங்களும் – நிபுணரின் விளக்கம்..!

இன்றைய சூழலில் கொரோனாவைத் தடுக்கும் வலுவான ஆயுதம் தடுப்பூசி மட்டுமே என்கிறது அறிவியல் உலகம். தடுப்பூசி குறித்து நாள்தோறும் பல்வேறு சந்தேகங்களும், குழப்பங்களும் எழுந்து வருகின்றன. அமெரிக்கா மற்றும் தென்கொரியாவில் இயங்கும் GeneOne Life Science, நிறுவனத்தின் தலைமை ஆராய்ச்சியாளரான கார் முத்துமணி, தடுப்பூசி குறித்த சந்தேகங்களும், குழப்பங்களும் விளக்கம் அளித்துள்ளார். அதை பற்றி பார்ப்போம். தற்போது என்னென்ன வகையான தடுப்பூசிகள் இருக்கின்றன? அவற்றுக்கிடையே என்ன வேறுபாடு? கோவிஷீல்டு, கோவேக்சின், ஃபைசர், மாடர்னா போன்ற பல தடுப்பூசிகள் […]

சினிமா

பீஸ்ட் – தளபதி 65 திரைப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியானது

நடிகர் விஜய் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் தளபதி 65 திரைப்படத்திற்கு பீஸ்ட் என பெயரிடப்பட்டுள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாஸ்டர் திரைப்படத்திற்கு அடுத்து சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கு அனிருத் ரவிச்சதிரன் இசையமைக்கிறார். பீஸ்ட் திரைப்படத்தின் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். மிஸ்கின் இயக்கத்தில் வெளியான முகமூடி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை பூஜா ஹெக்டே. அதன் பின் […]

செய்திகள்

கூடங்குளம் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் உற்பத்தி

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் மக்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டு உள்ளனர். கொரோனா தொற்றின் இரண்டாவது அலையில் உயிரிழப்பு எண்ணிக்கையும் அதிகரித்து உள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மூச்சி திணறல் ஏற்படுவதால் ஆக்சிஜன் தேவை அதிகரித்து வருகிறது. ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழப்பு ஏற்படுகிறது. இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் கூடங்குளம் அரசு மருத்துவமனையிலும், திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரியிலும் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய வலியுறுத்தியுள்ளார். கூடங்குளம் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் உற்பத்தி நிலையம் அமைக்க அரசு அனுமதி […]

corona vaccine செய்திகள்

ஜூன் 21 ஆம் தேதி முதல் 18 வயதிற்கு மேற்பட்டவருக்கு இலவச தடுப்பூசி

நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக அனைவருக்கும் தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு இலவசமாக தடுப்பூசி போடப்பட்டு வந்த நிலையில் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. கடந்த ஜூன் 7 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக நாட்டு மக்களிடம் உரையாடினார். அப்போது அவர் தடுப்பூசிக்காக பணத்தை மாநிலங்கள் செலவழிக்க வேண்டாம். இன்று முதல் மாநிலங்களுக்கு இலவசமாக தடுப்பூசி வழங்கப்படும் என்று […]

கல்வி

B.ed, M.ed படிப்பிக்கான தேர்வு ஜூன் 28 ஆம் தேதி தொடங்க உள்ளது

தமிழ்நாடு ஆசிரியர் கல்வியல் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் கல்லூரிகளில் B.ed, M.ed பயிலும் மாணவர்களுக்கான தேர்வு நடைபெற உள்ளது. இரண்டாம் ஆண்டு பயிலும் மாணவர்களுக்கும், முதலாம் ஆண்டில் அரியர் வைத்து இருக்கும் மாணவர்வர்களுக்கான தேர்வு ஜூலை மாதம் தொடங்க உள்ளது. B.ed, M.ed படிப்பிக்கான தேர்வு அட்டவணையை தமிழ்நாடு ஆசிரியர் கல்வியல் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. தேர்வு கட்டணம் செலுத்துவதற்க்கான கால அவகாசம் இன்று(திங்கள்கிழமை) முடிவடைய உள்ளது. B.ed, M.ed படிப்பிக்கான இரண்டாம் ஆண்டு தேர்வு மற்றும் […]

Jagame Thandhiram சினிமா

கலவை விமர்சனங்களுடன் இணையத்தில் ஜகமே தந்திரம்..!

தனுஷ் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியத்தில் உருவான ஜகமே தந்திரம் படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் சூப்பர்ஹிட்டாகும் என்று படக்குழு மிகவும் எதிர்பார்த்தது. ஆனால் கொரோனா நோய் தொற்று பரவல் காரணமாக இந்த படம் நேற்று OTT-யில் வெளியானது. மேலும் இத்திரைப்படத்தின் ஆடியோ மற்றும் சிங்கள் பாடல்களும் இணைய வாயிலாகவே வெளியிடப்பட்டன. கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய இந்த திரைப்படத்திற்கான பணிகள் கடந்த 2019ம் ஆண்டு YNOT ஸ்டுடியோஸ் தயாரிப்பில் தொடங்கப்பட்டது. சென்னை, மதுரை மற்றும் லண்டன் […]

corona third wave செய்திகள்

கொரோனா மூன்றாம் அலை குறித்து மருத்துவ நிபுணர்கள் வெளியிட்ட முக்கிய தகவல்..!

கொரோனா வைரஸ் தொற்றுநோய்களின் மூன்றாவது அலை அக்டோபர் மாதத்திற்குள் இந்தியாவை தாக்கும் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலையில் பாதிப்பு வெகுவாக குறைந்து வருகிறது. இதனால் மாநில அரசுகள் ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்தி வருகின்றன. கொரோனா மூன்றாவது அலை இந்த ஆண்டு அக்டோபர் மாதத்திற்குள் இந்தியாவை தாக்கும் என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகிறார்கள். மேலும் கொரோனா இரண்டாவது அலையைக் காட்டிலும் மூன்றாவது அலையை சிறப்பாகக் கட்டுப்படுத்தலாம் என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகிறார்கள். […]

tamil nadu police செய்திகள்

காவல்துறையினருக்கு ஊக்கத் தொகை வழங்குவதற்கு ரூபாய் 58.59 கோடி நிதி ஒதுக்கீடு – தமிழக அரசு

கொரோனா காலத்தில் பணியாற்றி வரும் காவல்துறையினரை முன் களப்பணியாளர்களாகவும், இவர்களுக்கு சிறப்பு ஊக்கத் தொகையாக ரூ.5,000 வழங்கப்படும் என்றும் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் ஏற்கனவே அறிவித்திருந்தார். இந்நிலையில் தற்போது தமிழக அரசு செய்திக்குறிப்பில், கொரோனா காலத்தில் பணியாற்றி வரும் காவல்துறையினருக்கு ஊக்கத் தொகை வழங்குவதற்கு ரூபாய் 58.59 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிதி ஒதுக்கீடு மூலம், முன் களப்பணியாளர்களான காவல்துறையினருக்கு சிறப்பு ஊக்கத் தொகையாக ரூ.5,000 வழங்கப்படும். இதன் மூலம்,சுமார் ஒரு […]

Toxic madan செய்திகள்

‘பப்ஜி’ மதன் சார்பில் ஆஜரான வழக்கறிஞரிடம் கேள்வி எழுப்பிய நீதிபதி..!

யூடியூபர் பப்ஜி மதன் இன்று தர்மபுரியில் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் அவருக்கு சட்ட ரீதியான சிக்கல்கள் அதிகரித்துக் கொண்டு வருக்கிறது. மதனின் முன் ஜாமின் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. பப்ஜி விளையாட்டில் திறமையாக விளையாடும் சேலத்தை சேர்ந்த மதன் குமார் ”டாக்சிக் மதன் 18” என்னும் யூடியூப் பக்கத்தை ஆரம்பித்து ஆன்லைன் ஸ்ட்ரீமிங் மூலம் சிறுவர்கள் அதிகம் விரும்பி விளையாடும் ‘பப்ஜி’ போன்ற விளையாட்டுகளை சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் மதன் ஆன்லைன் […]

anna university job செய்திகள் வேலைவாய்ப்பு

சென்னை அண்ணா யூனிவர்சிட்டியில் பியூன், அசிஸ்டன்ட் வேலைவாய்ப்பு..!

அண்ணா யூனிவர்சிட்டியின் அதிகாரபூர்வ இணையதளத்தில் Peon & Clerical Assistant பணியிடங்களுக்கான அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு கல்வித்தகுதி 5th, 8th, Any Degree என கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு பணியிடமாக சென்னை(Chennai) கொடுக்கப்பட்டுள்ளது. தகுதியுடையோர் மற்றும் திறமைமிக்க விண்ணப்பதாரர்கள் நேர்காணல்(Interview) மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். இந்த வேலைக்கு தகுதியும்,விருப்பமமும் உள்ளவர்கள் உடனே விண்ணப்பியுங்கள். நிறுவனம் : Anna University பணியின் பெயர் : Peon & Clerical Assistant கல்வித்தகுதி : […]

government school admission செய்திகள்

அரசுப் பள்ளியில் சேரும் மாணவர்களுக்கு ரூ.1,000 பரிசு வழங்கிய தலைமை ஆசிரியர்..!

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் அரசு பள்ளியில் சேரும் மாணவர்களுக்கு தலைமை ஆசிரியர் ஜெயக்குமார் ஆயிரம் ரூபாய் பரிசு வழங்கி வருகிறார். இந்த சம்பவம் பொதுமக்களிடையே ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை கணிசமாக குறைந்து வரும் நிலையில், அனைத்து பள்ளிகளிலும் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரையில் மாணவர் சேர்க்கைக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து கடந்த ஜூன் 14 ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை […]